தி.மு.க., 'மாஜி'க்களை விட்டுவிட்டு என்னை மட்டும் விமர்சிக்கின்றனர்: அமைச்சர் வெங்கடரமணன் ஆதங்கம்

2

திருச்சி :

திருச்சியில், தமிழக உணவு துறை அமைச்சர் வெங்கட்ரமணன் அளித்த பேட்டி:

தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் நேரு, பன்னீர்செல்வம் ஆகியோர், ரேஷன் அரிசியை சமைத்து சாப்பிட்டதாகக் தெரிவித்தனர். அவர்கள் கூறியது பற்றி, யாரும் எந்த கேள்வியும் எழுப்பவில்லை. அவர்கள், விமர்சனங்களுக்கு உள்ளாகவில்லை. ஆனால், நான் மட்டும், விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறேன். இது ஏன், எப்படி என தெரியவில்லை.

த.வெ.க., அரசு பேசுவதை விட, செயல்பாட்டில் தான் காண்பிக்கும். கூட்டுறவு பண்டக சாலை, அமுதம் அங்காடிகளில், கிலோ 30 ரூபாய்-க்கு அரிசி விற்பனை செய்யும் திட்டத்துக்கு, மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை, 25,000 மெட்ரிக் டன் அரிசி விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

கர்நாடகா, தெலுங்கானாவில் இருந்து, அரிசி வரத்து குறைவாக இருந்தது. தற்போது அங்கு, வேளாண் பணிகள் முடிந்து, நெல் கொள்முதலை ஆரம்பித்துள்ளதால், தீபாவளிக்குள், அங்கிருந்து அதிக அளவில் அரிசி வரும். அப்படி வந்தால், அரிசி விலை கட்டுக்குள் வந்துவிடும். முதல்வரை அவதுாறாக பேசுபவர்கள் கைது செய்யப்படுவர். மக்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கின்றனர். அரசு மீது, எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு கூறுவது பொதுவானது. அனைத்து குற்றச்சாட்டுகளையும் உள்வாங்கி, எது நடைமுறைக்கு சரியானதாக இருக்கிறதோ, அதை பரிசீலித்து, நடவடிக்கை எடுக்கிறோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement