மழைநீருடன் கலந்து ஓடிய கழிவுநீரால் மக்கள் அவதி
கோடம்பாக்கம்:கோடம்பாக்கம்,தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில்
நே ற்று முன்தினம் இரவு பெய்த மழையால்,பல இடங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தவிர, மழைநீருடன்க ழிவுநீர் கலந்து ஓடியதால்,பொதுமக்கள் தவித்தனர்.
சென்னையின் பல இடங்களில்,நேற்றுமுன்தினம் இரவு பலத்த மழை
பெய்தது.இதனால்,கோடம்பாக்கம்பராங்குசபுரம்,அஜீஸ் நகர் பிரதான சாலை,சுப்பிரமணிய நகர்,ரங்கராஜபுரம்பிரதான சாலை உள்ளிட்ட இடங்களில்மழைநீர் தேங்கியது.
தி.நகர் பர்கிட்சாலை,மோதிலால் தெரு, காவலர்கள் குடியிருப்பு, உஸ்மான் சாலை, பசுல்லா சாலை சந்திப்பு, பிரகாசம் சாலை ஆகியவற்றிலும் தண்ணீர் குளம்போல்தே ங்கியது.
நாகேஸ்வரராவ் சாலையில் மழைநீருடன்க ழிவுநீர் கலந்ததால் துர்நாற்றம் வீசியது.கே.கே.நகர் பாரதிதாசன் காலனி நான்காவதுதெ ரு, மாநகராட்சி பூங்கா , தி.நகர் சோமசுந்தரம் விளையாட்டுத்திடல் ஆகிய இடங்களிலும் தண்ணீர் தே ங்கியது.நெ ரிசல் நாகேஸ்வர ராவ் சாலையில்தண்ணீர் தேங்கியதால்,வெங்கட்நாராயணசாலையில் இருந்து பிஞ்சாலசுப்பிரமணி
தெரு வழியாக உஸ்மான் சாலைக்குவாகனங்கள் திருப்பிவிடப்பட்டன
.
இதனால்,அப்பகுதிகளில் நெரிசல்ஏற்பட்டது.பசுல்லா சாலை சந்திப்பிலும்
தண்ணீர் தேங்கியதால், தி.நகர்மேம்பாலத்தில்வாகனங்கள்அணிவகுத்து
நின்றன.திருமுல்லைவாயில் பாலாஜி நகரில் 100க்கும் மேற்பட்ட தனியார்
நிறுவனங்கள்,சிறு, குறு தொழிற்சாலைகள்உள்ளன.மழையால் கழிவுநீருடன்
மழைநீர் க லந்து துர்நாற்றம்வீசுகிறது.
தாழ்வான ஆலைகளுக்குள் நீர் புகுந்ததால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இரும்பு, ரசாயன ஆலைக்கழிவுகள்மழைநீரில்கலந்து நிறம் மாறி உள்ளன. இதில்நடக்கும் தொழிலாளர்களுக்கு கால் அரிப்பு, எரிச்சல் ஏற்படுவதுடன், நிலத்தடிநீரும் பாதிக்கும்அபாயம்உள்ளது.
விவே கானந்தா நகரில்,500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. சம்பங்கி,
குறிஞ்சி, தாமரை தெருக்களில் மழைநீருடன் கழிவுநீர் தே ங்கி துர்நாற்றம்
வீசுகிறது.இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெ ளியேற முடியாமல் தவிக்கின்றனர்.
மரங்கள் சாய்ந்தன:
கோடம்பபாக்கம் சோமசுந்தரம்விளையாட்டுத்திடல் அருகிலும்,
அசோக்நகர் ஆறாவதுஅவென்யூவிலும்மரங்கள்சாலையில் விழுந்தன. அண்ணா நகர், நியூ ஆவடி சாலையில் வேரோடு சாய்ந்து மரங்கள் சாலையில் விழுந்தன.இதனால்,அப்பகுதியில் போக்குவரத்து
நெரிசல்ஏற்பட்டது.
பால் கனிசுவர் இடிந்தது:
பெரம்பூர்,ரமணா நகர் அசோகர் தெருவில்,சுரேஷ் என்பவருக்கு சொந்தமான30 ஆண்டுகள் பழமையானவீட்டில்,பால்கனி பக்கவாட்டு சுவர் நே ற்று முன்தினம்இரவு 10:00 மணிக்கு இடிந்து விழுந்தது. இதில் கீழே நிறுத்தி வைக்கப்பட்ட 'மாருதி சுசூகி சிலேரியோ' கார் சேதமானது.
மின் தடையால் மறியல்:
வண்ணாரப்பேட்டை, வரதராஜபெருமாள்கோவில் தெருவில்,300க்கும் மே ற்பட்ட குடும்பங்கள் உள்ளன.இப்பகுதியில்நே ற்று அதிகாலை 3:00 மணிக்கு மின்தடை ஏற்பட்டது.மதியம்12:00 மணி வரை மின்சாரம்வராததால் ஆத்திரமடைந்த அப் பகுதி மக்கள், வள்ளலார் நெடுஞ்சாலை
கல்லறைச் சாலை சந்திப்பில், மறியலில்ஈடுபட்டனர். மதியம்1:15மணிக்கு மின் வினியோகம் சீரானது.
மைதானத்தை சூழ்ந்தமழைநீர்:
மெரினா கடற்கரையில்,முதல்வர் கோப்பை பீச் வாலிபால் விளையாட்டிற்காக அமைக்கப்பட்ட அரங்கத்தை, மழைநீர் சூழ்ந்துள்ளது. மேடவாக்கம் அரசுஉயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மழைநீர்தேங்கி நிற்கிறது.
மக்களுக்குஉணவு வழங்கல்:
சென்னை மாநகராட்சி மற்றும்அரசு பள்ளிகளில், காலை உணவு திட்டம்
செயல்படுத்தப்படுகிறது.மழை காரணமாகசென்னை மாவட்டத்திற்கு நேற்று, விடுமுறை அறிவிப்பு அதிகாலை 5:30 மணிக்கு அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக பல இடங்களில் உணவுகள் தயாரிக்கப்பட்டுவிட்டன. இந்நிலையில்,விடுமுறைஅறிவிக்கப்பட்டதால், அதிக மழைநீர் தேங்கிய, தாழ்வான பகுதிகளில் வசிக்கும்மக்களுக்கு, காலை திட்ட உணவுகள் வழங்கப்பட்டன.