காத்திருப்போர் பட்டியலில் ஐ.பி.எஸ்., ராதிகா
சென்னை: 'கிரானைட்' வீரமணி வழக்கில் விசாரணைக்கு ஆளான ஐ.பி.எஸ்., அதிகாரி ராதிகா, பணியிடம் இன்றி, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தி.மு.க., ஆட்சியில், சென்னை போலீசில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக, ஐ.பி.எஸ்., அதிகாரி ராதிகா பணியாற்றினார். தற்போது, டி.ஜி.பி., அலுவலகத்தில், நிர்வாக பிரிவு ஐ.ஜி.,யாக இருந்தார்.
சிறுமியரை வன்முறை செய்ததாக, கிரானைட் வீரமணி மீது புகார் வந்தபோது, அவர் சென்னை போலீசில் பணிபுரிந்தார். அதனால், அவரை தற்போது எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரித்தனர்.
தற்போது, அவர் வகித்து வந்த, டி.ஜி.பி., அலுவலக நிர்வாக பிரிவுக்கு, திருச்சி கமிஷனராக இருந்த காமினி நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், ராதிகா காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு இருப்பதாக, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏற்கனவே, இந்த விவகாரம் தொடர்பாக, கூடுதல் டி.ஜி.பி., அருண், டி.எஸ்.பி., யாஸ்மின் ஆகியோரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அரசு எந்திரத்தின் ஈரல் கெட்டு விட்டது. தலைமை செயலாளர் , உள்துறை செயலாளர் அவர்களை காப்பாற்ற தான் நினைப்பர். உடனடி பணி இடைநீக்கம் செய்யயுங்கள். மூன்றே மாதத்தில் வழக்கை முடித்து தண்டனை கொடுங்கள். முடியாவிட்டால் ராஜினாமா செய்து விட்டு வீட்டில் ஓய்வெடுங்கள். வேலையில்லாமல் நிறைய பேர் இருக்காங்க.
சம்பளத்துடன் கூடிய விடுமுறை .. இதில் என்ன இருக்கு
அவ்வளவுதானா ?? ஏன் சட்ட நடவடிக்கை இல்லை ?? சாதாரண பொதுஜனத்துக்கு இந்த சலுகை கிடைக்குமா ?? அரசுத்துறையில் இருப்பது அவ்வளவு பாதுகாப்பானதா ??
காத்திருப்போர் பட்டியலில் இருப்போர்க்கு சம்பளம் எதற்காக?. சம்பளத்தை கொடுக்கவேண்டாம். மக்களின் வரிப்பணம் ஒரு குற்றவாளிக்கு உதவி செய்தவருக்கு கொடுக்க படுவது நியாயம் இல்லை.
வேலை கிடைக்கறவரைக்கும் தான் எலும்பும் தோலுமாக இருப்பார்கள் .. அங்கி மற்றும் அந்தஸ்து கிடைத்தவுடன் .. உடமபை துரும்பாக வைத்துகொள்ள்ளவேண்டிய எண்ணம் பல போலீசுக்காரர்களிடம் இல்லவே இல்லை. உருவாக்கேலி வெங்காயகேலி என்கிற வாதம் இருந்தா ஓரமாக போயிட்டு விளையாடுங்க. நாட்டின் பாதுகாப்பு முக்கியம் அரசு பணத்தில் சொகுசாக வயிறு வளர்ப்பது முறையல்ல .
புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காவிட்டால் வேலைக்கு ஆபத்து. முக்கிய புள்ளிகள் மீது விசாரணை நடத்தினால் உயிருக்கே ஆபத்து.
கையாலாகாதா ஸ்டாலின் ஆட்சியில் ஒட்டு மொத்த காவல் துறைய செயலிழந்து விட்டது. IPS ஆபிசர்கள் எப்படி இவ்வளவு கீழ் நிலைக்கு போனார்கள். சட்டத்தை அமல் படுத்துபவர்களே பணம் வாங்கி அதை மறைத்தால் ....என்ன சொல்ல இப்படியும் ஒரு நாடு இருக்குமா ..?. புரையோடிய காவல் துறையில் பெரிய மாற்றங்கள் வரணும். அதற்கு ஆளும் கட்சி முக்கியமாக துறை அமைச்சர் சரியாக செயல் பாட்டானும். இப்போ உள்ள நிலை திராவிட மடல் ஸ்டாலினால் வந்தது. இதற்க்கு முக்கிய குற்றவாளி ஸ்டாலின் தான். இவரையும் முக்கிய கேசுகளின் விசாரிக்கணுமா. பணம் வாங்கி ஆட்சி செய்தால் என்ன ஆகும் என்பது இது தான்.
ஐய்யா, ஜாலி ...சம்பளத்தோடு லீவு, வேல வெட்டின்னு தொந்தரவு இல்லை.
நன்றாக தின்று கொழுத்திருக்கு
குற்றவாளிகளுக்கெல்லாம் இந்த நாட்டில் ஊதியம்.இவர்களால் பாதிக்கப்படும் நேர்மையானவர்களுக்கு ஒன்றும் இல்லை இந்த நாட்டில்.இப்படிப்பட்ட நிலையில் 2047 ல் இந்நாடு பொருளாதாரத்தில் வல்லரசாக மாறிவிடும் பொய்யுரை செய்கின்றனர்.