இபிஎஸ் ஏணிகளை எட்டி உதைத்துப் பழக்கப்பட்டவராச்சே.. : அந்துமணி பதில்கள்
@block_B@எம்.பாஸ்கர், தஞ்சாவூர்:
block_Bஇதற்குப் பெயர் தான், 'அந்தர் பல்டி!' இப்படி தலைகீழாக மாற்றிப் பேச, பழனியில் இருக்கும் அந்த சாமியிடமிருந்தே அழுத்தம் வந்ததோ, என்னவோ!
@block_Y@கே.ரவிஷங்கர், திருத்தணி:
block_Y
சிங்கப்பூர் மக்களுக்கு, அன்னாசி பழத்தை உருட்டி, ஒரு நல்ல காரியத்தைத் துவக்கினால், செல்வம் செழிக்கும் என்பது நம்பிக்கை. அவரவர் நம்பிக்கையை மதிப்பது தானே நாகரிகம்!
@block_P@ஆர்.ஹரிகோபி, புதுடில்லி:
block_Pபறக்கும் கார்களின் ஒருநாள் வாடகையே லட்சங்களில் இருக்குமே! அதனால் சாமானிய மக்கள் அதை எப்படி உபயோகப்படுத்த முடியும்? அரசியல்வாதிகளின், 'ஸ்டன்டு'க்கும், படாடோபத்துக்கும் வேண்டுமானால் உபயோகப்படும், ஹரி!
@block_G@ஆர்.கலா, பாலக்காடு:
block_Gமாணவர்கள் தங்கள் பாட புத்தகங்களை மட்டும் படிக்காமல், அதையும் தாண்டி படிக்க வேண்டும், தங்களை சுற்றி நடக்கும் நல்ல விஷயங்களிலிருந்து படிப்பினை பெற வேண்டும். அப்போது தான் வாழ்க்கையில் வெற்றியாளராக திகழ முடியும். விஜய் கூறியிருப்பது சரியே!
@block_B@ப.சோமசுந்தரம், சென்னை:
block_Bதான் ஏறுவதற்குப் பயன்படும் ஏணிகளை, பலமுறை எட்டி உதைத்துப் பழக்கப்பட்டவராச்சே... இப்படி தானே பேசுவார்! பரமபத விளையாட்டு தான் போங்க!
@block_Y@தெய்வசிகாமணி, ஈரோடு:
block_Yகாங்., கட்சியின் குறிக்கோளே, பா.ஜ., அரசை ஆட்சியில் இருந்து கீழே இறக்க வேண்டும் என்பது தானே! அவர்கள் எப்படி கண்டிப்பர்?
வங்கதேச கரப்பான்களினால் பலனடைந்தது எதிர்க்கட்சி. இப்பொழுது ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது. காங்கிரசுக்கு அதுதான் வேண்டும்
எந்த ஏணியை எட்டி உதைத்தார்
அய்யா! நான் ஆடு களவு போச்சுன்னு சொல்லல.ஆடு களவு போனது மாதிரி கனவுதான் கண்டேன். அப்படித்தான் இருக்கிறது செங்கோட்டையனின் அந்தர் பல்டி பேச்சு.
அதிகம் அறிந்து கொள்ள மாணவர்களுக்கு முதல்வர் அட்வைஸ் செய்வது இருக்கட்டும். முதல்வர் முதலில் அதிகம் அறிந்து கொள்வதில் விருப்பம் உள்ளவராக இருக்கிறாரா? அறிந்து கொண்டிருந்தால் அப்புறம் ஏன் முதல்வரின் துறைக்கு மற்றஅமைச்சர்களே சட்டசபையிலும், பொதுவெளியிலும் பதில் அளிக்கிறார்கள்? அனைத்தையும் அறிந்து கொண்டு முதல்வர் அல்லவா நேரில் பதில் அளிக்க வேண்டும்?
அ.தி.மு.க.எடப்பாடியால்
அவதிப்படும் உண்மையை
தினமலர் சொன்னால் எயப்பாடி தினமலர் தன்னை தாக்கி எழுதியது என மூக்கால் அழுகிறார்..பழனிசாமி