1 வயது பெண் குழந்தையை ஒரு மாதமாக தேடும் போலீஸ்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அடுத்த லாலாபேட்டையை சேர்ந்தவர் சேகர், 46. இவரது மனைவி பிரேமா, 23. இருவரும் பிளாஸ்டிக் சேகரித்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்களின் ஒரு வயது பெண் குழந்தை மகேஸ்வரியுடன், சாலையோரத்தில் வசித்துள்ளனர். செப்., 24ம் தேதி மாணிக்கம் நகர் சாலையோரத்தில், பெற்றோருடன் துாங்கிக் கொண்டிருந்த குழந்தை திடீரென மாயமானது.
பல்வேறு இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்காததால், போலீசில் புகார் அளித்தனர். சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து, குழந்தையை தேடினர். இதுவரை குழந்தை கிடைக்கவில்லை. அக்குழந்தை கடத்தப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிப்காட் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசியிடம் கேட்டபோது, ''ஏ.டி.எஸ்.பி., தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குழந்தையை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.
வாசகர் கருத்து (1)
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
22 அக்,2026 - 08:25 Report Abuse
சாலையோரம் வசிப்பவர்களுக்கு இது மிகப்பெரிய பிரச்னை .... உறுப்புத்திருடர்கள் [சற்று வளர்ந்த பிறகு] , குழந்தை விற்பனையாளர்களால் நடந்திருக்கலாம் .... 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement