கிணற்றில் விழுந்த மான் மீட்பு
நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை
ஒன்றியம், முள்ளுக்குறிச்சி அடுத்த மலையாளப்பட்டியை சேர்ந்தவர்
பெருமாள் மகன் பிரகாஷ், 50; விவசாயி. இவரது விவசாய தோட்டம்,
அப்பகுதியில் உள்ளது.
இந்த தோட்டத்தில் உள்ள, 60 அடி ஆழ கிணற்றில்,
நேற்று தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் ஒன்று எதிர்பாராதவிதமாக தவறி
உள்ளே விழுந்தது. கிணற்றுக்குள் மான் தத்தளித்து கொண்டிருந்ததை
பார்த்த பிரகாஷ் உடனடியாக ராசிபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல்
தெரிவித்தார்.தகவல்படி, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற
தீயணைப்புத்துறை அலுவலர் பலகார ராமசாமி தலைமையில், தீயணைப்பு
வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி கிணற்றில் தத்தளித்த புள்ளிமானை
உயிருடன் பத்திரமாக மீட்டனர்.
பின், மீட்கப்பட்ட புள்ளிமான்
குறித்து முள்ளுக்குறிச்சி வனத்துறைக்கு, தீயணைப்புத்துறையினர்
தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த வனத்துறை ஊழியர்களிடம்,
மீட்கப்பட்ட புள்ளிமான் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது. அவர்கள்,
புள்ளிமானை பாதுகாப்பான வனப்பகுதிக்குள் கொண்டுச்சென்று
விட்டனர்.
மேலும்
-
டில்லியில் பிரதமர் மோடியுடன் போலந்து பிரதமர் டொனால்டு டஸ்க் சந்திப்பு
-
தஞ்சாவூர் மண்ணெடுத்து பாடலை பாடிய கிருஷ்ணராஜ் காலமானார்
-
கரப்பான் கும்பலுக்கு டில்லி குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் சம்மன்
-
முருகன் ராஜினாமா; காலியான எம்பி பதவிக்கு இடைத்தேர்தல் அறிவித்தது தேர்தல் கமிஷன்
-
இன்ஸ்டா பிரபலம் ஹரிஷ் தற்கொலை வழக்கு; சக யூடியூபர் கைது
-
வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தல்; சகோதரிகள் 3 பேர் கைது