ப.வேலுார் ஜி.ஹெச்.,ல் 'குடி'மகன்கள் அட்டகாசம் போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரிக்கை
ப.வேலுார்:ப.வேலுார் அரசு தலைமை மருத்துவமனையில், 'குடி'மகன்களின் தொடர் ரகளையால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுாரில் செயல்பட்டு வரும் தாலுகா அரசு தலைமை மருத்துவமனைக்கு
ப.வேலுார், பாலப்பட்டி, நன்செய் இடையாறு, குப்புச்சிபாளையம்,
பொத்தனுார், பாண்டமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை
சேர்ந்த பொதுமக்கள் நாள்தோறும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
தினமும்,
500-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள், 80க்கும் மேற்பட்ட
உள்நோயாளிகள் இங்கு சிகிச்சை பெறுகின்றனர். கடந்த சில நாட்களாக
இப்பகுதியில் மதுபோதையில் வருபவர்கள் மருத்துவர்களுக்கும்,
செவிலியர்களுக்கும், நோயாளிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலை
ஏற்படுத்தி வருகின்றனர்.
கடந்த, 13ல், ப.வேலுார் அருகே உள்ள
பாலப்பட்டி, எல்லைமேடு டாஸ்மாக் கடையில் மது அருந்திய இரு
தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதில்,
நான்கு பேருக்கு மண்டை உடைந்தது. அவர்கள், ஆம்புலன்ஸ் மூலம் ப.வேலுார்
அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டுவரப்பட்டனர். அங்கு
சிகிச்சையில் இருந்தபோதும், இரு கோஷ்டியினரும் மருத்துவமனை
வளாகத்திலேயே மீண்டும் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டனர்.
இதனால்
அதிர்ச்சியடைந்த நோயாளிகளும், அவர்களது உறவினர்களும்
அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர். தகவலறிந்து வந்த ப.வேலுார்
போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி, மேல் சிகிச்சைக்கு,
நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம்
ஓய்வதற்குள், அன்று மாலை, ப.வேலுாரைச் சேர்ந்த விலங்கு ஆர்வலர்,
காயமடைந்த தெருநாய் ஒன்றை மருத்துவ
மனைக்குள் கொண்டுவந்து அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும் எனக்கூறி அடாவடியில் ஈடுபட்டார்.
அங்கு
மனிதர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும், கால்நடை
மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என, அங்கிருந்தவர்கள் நீண்ட
நேரம் எடுத்துக்கூறி போராடி அவரை வெளியே அனுப்பி வைத்தனர்.
அடுத்தடுத்து அரங்கேறும், 'குடி'மகன்களின் இத்தகைய
அத்துமீறல்களால் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களும்,
பணியாற்றும் செவிலியர்களும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
எனவே, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, ப.வேலுார் அரசு தலைமை மருத்துவமனையில் நிரந்தரமாக போலீஸ் பாதுகாப்பு
போட வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ர்.
மேலும்
-
டில்லியில் பிரதமர் மோடியுடன் போலந்து பிரதமர் டொனால்டு டஸ்க் சந்திப்பு
-
தஞ்சாவூர் மண்ணெடுத்து பாடலை பாடிய கிருஷ்ணராஜ் காலமானார்
-
கரப்பான் கும்பலுக்கு டில்லி குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் சம்மன்
-
முருகன் ராஜினாமா; காலியான எம்பி பதவிக்கு இடைத்தேர்தல் அறிவித்தது தேர்தல் கமிஷன்
-
இன்ஸ்டா பிரபலம் ஹரிஷ் தற்கொலை வழக்கு; சக யூடியூபர் கைது
-
வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தல்; சகோதரிகள் 3 பேர் கைது