போனஸ் கேட்டு டாஸ்மாக் சுமை பணியாளர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்,:தீபாவளிக்கு,
10 நாட்களுக்கு முன்பாக போனஸ் வழங்கக்கோரி, நாமக்கல் அடுத்த
கிருஷ்ணாபுரம் டாஸ்மாக் குடோன் முன், டாஸ்மாக் டிரான்ஸ்போர்ட் டெலிவரி
சுமைப்பணி தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க
தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார்.
பொருளாளர் தினேஷ் முன்னிலை
வகித்தார். சி.ஐ.டி.யு., மாநில துணை தலைவர் சந்திரன், மாவட்ட செயலாளர்
வேலுசாமி ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில்,
டாஸ்மாக் கிடங்குகளில் இருந்து மதுபான பெட்டிகளை கடை வாசலில் இறக்கி
வைக்க, பெட்டி ஒன்றுக்கு, 10 ரூபாய் வழங்க வேண்டும். கடைக்குள் சென்று
பெட்டிகளை அடுக்கி வைக்க, அட்டிக்கூலியாக, 5 ரூபாய் வழங்க வேண்டும்.
டிரைவர்களுக்கு நாள் ஒன்றுக்கு, 1,000 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும்.
குண்டும்,
குழியுமான சாலைகளில் வாகன அதிர்வால் உடையும் பாட்டில்களுக்கு, சுமை
துாக்கும் தொழிலாளர்களிடம் வற்புறுத்தி பணம் பறிப்பதை கைவிட
வேண்டும். அனைவருக்கும் அடையான அட்டை வழங்க வேண்டும். பி.எப்., மற்றும்
இ.எஸ்.ஐ., திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட
கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பின
மேலும்
-
டில்லியில் பிரதமர் மோடியுடன் போலந்து பிரதமர் டொனால்டு டஸ்க் சந்திப்பு
-
தஞ்சாவூர் மண்ணெடுத்து பாடலை பாடிய கிருஷ்ணராஜ் காலமானார்
-
கரப்பான் கும்பலுக்கு டில்லி குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் சம்மன்
-
முருகன் ராஜினாமா; காலியான எம்பி பதவிக்கு இடைத்தேர்தல் அறிவித்தது தேர்தல் கமிஷன்
-
இன்ஸ்டா பிரபலம் ஹரிஷ் தற்கொலை வழக்கு; சக யூடியூபர் கைது
-
வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தல்; சகோதரிகள் 3 பேர் கைது