உயிர் நீத்த காவலர்களுக்கு அஞ்சலி

ஈரோடு:ஈரோடு ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை மைதானத்தில், காவலர் வீர வணக்க தினத்தை முன்னிட்டு, பணியின் போது வீர மரணம் அடைந்த காவலர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவஞ்சலி செலுத்தும் இடத்தில், ஈரோடு கலெக்டர் கந்தசாமி, ஈரோடு எஸ்.பி., ஸ்ருதி கிரண் ஆகியோர், நேற்று மலர் வளையம் வைத்து, 48 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் போலீசாரின் துப்பாக்கி, பாதுகாப்பு உபகரணங்கள் வைக்கப்பட்டு இருந்ததை கலெக்டர் பார்வையிட்டார். ஏ.டி.எஸ்.பி., தங்கவேல், டி.எஸ்.பி.,க்கள்., இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement