கால்நடை ஆராய்ச்சி மையத்தில் நாளை வெள்ளாடு பயிற்சி
கரூர்:கரூர்,
பண்டுதகாரன்புதுார் அரசு கால்நடை பல்கலைகழக பயிற்சி மற்றும்
ஆராய்ச்சி மைய வளாகத்தில், நாளை (23ல்) ஒரு நாள் வெள்ளாடு வளர்ப்பு
பயிற்சி முகாம் நடக்கிறது.
அதில் வெள்ளாடு வளர்ப்பு, கொட்டகை
அமைத்தல், தீவன மேலாண்மை, ஆட்டு இனங்கள், ஆட்டுக்குட்டி வளர்ப்பு, நோய்
மற்றும் மருத்துவ முறை மற்றும் கால்நடை தொடர்பாக பல்வேறு
தலைப்புகளில், கால்நடை துறை பேராசிரியர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர்.
நாளை காலை, 10:30 மணிக்கு தொடங்க உள்ள பயிற்சி முகாமில், பங்கேற்ற
விருப்பம் உள்ளவர்கள், 04324-294335 மற்றும் 73390-57073 ஆகிய எண்களில்
தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சி கட்டணமாக, 590
ரூபாய் செலுத்த வேண்டும்.
இத்தகவலை பயிற்சி மையத்தின் தலைவரும், பேராசிரியருமான சக்திவேல் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement