சவுதியில் எண்ணெய் நிறுவனத்தின் மீதான தாக்குதலில் இருவர் பலி; அமெரிக்க அதிகாரிகள் வெளியேற உத்தரவு
ரியாத்: சவுதி மீது ஈரான் ஆதரவுபெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அரசுக்கு சொந்தமான அரம்கோ நிறுவனத்தின் ஷ்யாபா உண்ணெய் உற்பத்தி ஆலையின் மீது நேற்று காலை மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் பிலிப்பைன்ஸ், நேபாளத்தைச் சேர்ந்தவர் இருவர் உயிரிழந்தனர். இந்தியா, பாகிஸ்தானைச் சேர்ந்த இருவர் பலத்த காயமடைந்தனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "எதிரிகளால் ஏவப்பட்ட ட்ரோனை ராணுவத்தினர் இடைமறித்து அழித்து விட்டனர். இதன் உடைந்த பாகங்கள் வெடித்து சிதறி விழுந்ததில் இரு வெளிநாட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் எண்ணெய் ஆலைகளின் செயல்பாட்டில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை," தெரிவித்துள்ளனர்.
சவுதி அரேபியாவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அங்குள்ள அமெரிக்கத் தூதரக ஊழியர்கள், குடும்பத்தினருடன் நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
மேலும்
-
டில்லியில் பிரதமர் மோடியுடன் போலந்து பிரதமர் டொனால்டு டஸ்க் சந்திப்பு
-
தஞ்சாவூர் மண்ணெடுத்து பாடலை பாடிய கிருஷ்ணராஜ் காலமானார்
-
கரப்பான் கும்பலுக்கு டில்லி குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் சம்மன்
-
முருகன் ராஜினாமா; காலியான எம்பி பதவிக்கு இடைத்தேர்தல் அறிவித்தது தேர்தல் கமிஷன்
-
இன்ஸ்டா பிரபலம் ஹரிஷ் தற்கொலை வழக்கு; சக யூடியூபர் கைது
-
வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தல்; சகோதரிகள் 3 பேர் கைது