தமிழக வீராங்கனை மனிஷா ராமதாஸ்க்கு முதல்வர் விஜய் வாழ்த்து

சென்னை: பாரா ஆசிய விளையாட்டில் பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை மனிஷா ராமதாஸ்க்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்தார்.

அவரது அறிக்கை: ஜப்பானில் நடைபெற்றுவரும் 5வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் விளையாட்டில் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்ற தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை மனிஷா ராமதாஸ்க்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வீராங்கனை மனிஷா ராமதாஸின் சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழக அரசின் சார்பில் ரூ. 30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பால் இச்சாதனையைப் படைத்துள்ள வீராங்கனை மனிஷா ராமதாஸின் வெற்றி இளம் தலைமுறை பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய நம்பிக்கையை அளிக்கும். அவர், எதிர்காலத்திலும் பல வெற்றிகளைப் பெற்று தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகள்.

இவ்வாறு முதல்வர் விஜய் கூறியுள்ளார்.

Advertisement