சேதமடைந்து வரும் சாலை: சிரமத்தில் கிராம மக்கள்

கூடலுார்:கூடலுார் அருகே, சேதமடைந்துள்ள புளியாம்பாறை கிராம சாலையை சீரமைக்க வேண்டும்.

கூடலுார் புளியாம்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், 1000 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இக்கிராம மக்கள், மாணவர்கள் போக்குவரத்துக்கு, கோழிக்கோடு சாலை மரப்பாலத்தில் இருந்து பிரிந்து செல்லும் ஒன்றரை கி.மீ., இணைப்பு சாலையை பயன்படுத்தி வருகின்றனர். நேரடி பஸ் வசதி இல்லாததால் சொந்த வாகனங்கள் இல்லாதவர்கள் போக்குவரத்துக்கு தனியார் ஜீப் மற்றும் ஆட்டோவை நம்பியுள்ளனர்.

வாகன போக்குவரத்துக்கு பயன்படுத்தி வரும் சாலை பல இடங்களில் சேதமடைந்து உள்ளது. சீரமைக்க நடவடிக்கை இல்லாததால், சாலையில் வாகனங்கள் இயக்கவும், மக்கள் நடந்து செல்லவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, சேதமடைந்த சாலையை அதிகாரிகள் ஆய்வு செய்து சீரமைக்க, கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement