மின் கம்பத்தை சூழ்ந்த புதர்: மழை காலத்தில் ஆபத்து
பந்தலுார்: பந்தலுார் அருகே கோட்டைப்பாடி பகுதியில், சாலையோர மின் கம்பத்தை புதர் சூழ்ந்து வருவதால் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
பந்தலுார் அருகே கொளப்பள்ளியில் இருந்து அய்யன்கொல்லி செல்லும் சாலையில் கோட்டைப்பாடி கிராமம் உள்ளது. இந்த பகுதியில் பயணிகள் நிழற்குடை மற்றும் தனியார் பள்ளி செயல்பட்டு வரும் நிலையில், சாலையோர மின் கம்பங்களில் புதர்கள் சூழ்ந்து மின் கம்பம் தெரியாத நிலையில் காணப்படுகிறது. மழை பெய்தால் இதன் அருகே நிற்கும் பொதுமக்கள் மற்றும் விலங்குகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகி வருகிறது. எனவே, பாதிப்புகள் ஏற்படும் முன்னர் புதர் செடிகள் மற்றும் மூங்கில்களை அகற்ற வேண்டியது அவசியம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement