டெங்கு காய்ச்சல் அதிகரிப்புதடுப்பு நடவடிக்கை தீவிரம்

திருவாடானை: பருவநிலை மாற்றம் மற்றும் விட்டு, விட்டு பெய்த மழையின் காரணமாக திருவாடானை, தொண்டியில் தேங்கியிருக்கும் மழை நீரில் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

இதன் விளைவாக டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நிறைய பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வட்டார மருத்துவ அலுவலர் வைதேகி கூறுகையில், சுகாதாரத்துறை சார்பில் 40 மஸ்துார் பணியாளர்கள் வீடு, வீடாக சென்று பார்வையிட்டு தண்ணீர் தேங்காத வகையில் இருக்குமாறு மக்களுக்கு அறிவுரை வழங்குகின்றனர். மக்கள் தங்களது வீடுகளில் குடிநீரை மூடி பாதுகாக்க வேண்டும். சுய வைத்தியம் செய்து கொள்ளாமல் அருகில் உள்ள அரசு அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று ரத்தபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார்.

Advertisement