கூட்டுறவுத்துறை ஊழியர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்: தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடந்தது.

விழுப்புரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கண்ணன், பொருளாளர் வரதராஜன் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் செல்வக்குமார், ரகுநாதன், அருண்பிரசாத் உட்பட பலர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில், தரமற்ற வெங்காயம் கொள்முதல் செய்யப்படுவதைத் தடுக்க வேண்டும். 50 நாட்களில் 50 கோடி ரூபாய் அளவில் கூட்டுறவு பண்டக சாலைகளில் ஏற்பட்டுள்ள வர்த்தக இழப்பை சரிசெய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisement