கல்லுாரி மாணவர் தற்கொலை

விழுப்புரம்: கல்லுாரி மாணவர் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

விழுப்புரம் அடுத்த கொய்யாத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ஜனகராஜ், 17; விழுப்புரம் அரசு கலைக்கல்லுாரியில் பி.ஏ., வரலாறு முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் சரியாக கல்லுாரிக்கு செல்லாததால் ஆறுமுகம் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ஜனகராஜ், வீட்டில் துாக்குப்பாட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement