குளத்தில் பாய்ந்தது கார்; ஒரே குடும்பத்தினர் 4 பேர் காயம்

கோவை: கோவை சத்தி சாலையில், குரும்பபாளையத்தில் இருந்து பச்சாபாளையம் செல்லும் வழியில் கள்ளிப்பாளையத்தில் நான்கரை ஏக்கர் குளம் உள்ளது.

இன்று (அக் 23) காலை சாரல் மழை பெய்த போது, குளத்தை ஒட்டி, சாலையோரம் வந்த கார் குளத்திற்குள் புகுந்தது.

காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் காயம் அடைந்தனர். குளத்திற்கு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement