குமாரக்குடி பாலம் கட்டுமான பணி கலெக்டர் திடீர் ஆய்வு
சேத்தியாத்தோப்பு: குமாரக்குடியில் நடைபெற்று வரும் பாலம் கட்டுமான பணியை கலெக்டர் இன்று (அக்.,22) ஆய்வு செய்தார்.
சேத்தியாத்தோப்பு அடுத்த குமாரக்குடி அருகே வீராணம் ஏரி வடிகால் வாய்க்காலில் உள்ள குறுகிய வளைவு பாலத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து கலெக்டரின் பரிந்துரையின் பேரில் புதிய பாலம் கட்டுவதற்காக தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம் ரூ.3.75 கோடி நிதி ஒதுக்கியது.
அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பூமி பூஜையுடன் கட்டுமான பணியை துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று காட்டுமன்னார்கோவில் பகுதிக்கு ஆய்விற்கு சென்ற கலக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், குமாரக்குடி பாலம் கட்டுமான பணியை ஆய்வு செய்து, பணி முடிக்க வேண்டிய காலக்கொடு குறித்து அதிகாரிகளிடம் விசாரித்தார்.
அப்போது, நெடுஞ்சாலை அதிகாரிகள் பாலம் கட்டுமானப்பணிக்கான நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் 90 மீட்டர் தடுப்பு சுவர் அமைப்பதற்காக கூடுதல் நிதி வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
ஆய்வின்போது டி.ஆர்.ஓ., புண்ணியகோட்டி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட செயற்பொறியாளர் அன்பரசன், உதவிசெயற்பொறியாளர் கீதா, உதவி பொறியாளர் விமல் உடனிருந்தனர்.
மேலும்
-
குளத்தில் பாய்ந்தது கார்; ஒரே குடும்பத்தினர் 4 பேர் காயம்
-
டிஜிட்டல் உலகுக்கு ரெட் அலர்ட்! 70 சதவீத வெப்சைட்டுகளுக்கு ஆபத்து
-
தமிழகத்தில் பரவலாக பெய்தது மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
உலக சாதனையை முறியடித்தார் இந்தியாவின் சந்தீப்; தங்கம் வென்று தமிழக வீரர் நவீன் அசத்தல்
-
இந்தியாவை குறிவைத்து செய்யவில்லை; விசா கட்டுப்பாடு குறித்து அமெரிக்க அமைச்சர் சப்பைக்கட்டு
-
அக்.,26ல் உருவாகிறது 'அர்னாப்' புயல்... தமிழகத்தில் அதி கனமழைக்கு வாய்ப்பு