ரேஷன் அரிசி கடத்தியவருக்கு ‘2 ஆண்டு’

புதுக்கோட்டை: மீமிசலில் ரேஷன் அரிசி கடத்திய ரமேஷ், 49. என்பவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 5ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே உள்ள மீமிசலைச் சேர்ந்தவர் ரமேஷ் இவர், கடந்த 2024-ம் ஆண்டு மீமிசலில் காரில் 800 கிலோ ரேஷன் அரிசியைக் கடத்தியதாக, புதுக்கோட்டை குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கு புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட ரமேஷுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Advertisement