கோவில் உண்டியலில் பணம் திருடிய 2 பேர் கைது

அவலுார்பேட்டை: கோவில் உண்டியலில் பணம் திருடிய, 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் கடந்த, 20 ம்தேதி, இரவு கோவில் நடை சாத்தப்பட்டது.

அன்றிரவு 11:00, மணிக்கு மூலவர் சன்னதியின் வெளியே உள்ள உண்டியலில், இரு வாலிபர்கள் பணம் திருடியுள்ளனர்.

தொடர்ந்து சி.சி.டி.வி., கேமராவில் ஆய்வு செய்த போது, உண்டியலில் பணம் திருடியவர்கள் அதே ஊரை சேர்ந்த வெங்கடேசன் மகன் குமரன், 20; ராமன் மகன் கண்ணன்,21; என தெ ரிய வந்தது.

இது குறித்து அறநிலைய துறை உதவி ஆணையாளர் சக்திவேல், 51; புகாரின் பேரில் மேல்மலையனுார் போலீசார் வழக்குப்பதிந்து இரு வாலிபர்களையும் கைது செய்தனர்.

Advertisement