ரூ.75 லட்சம் மோசடி செய்த தி.மு.க., நிர்வாகிக்கு 'காப்பு'
திண்டுக்கல்: முதியவரிடம், 75 லட்சம் ரூபாய் மோசடி செய்த, சென்னையைச் சேர்ந்த தி.மு.க., நிர்வாகி ரஹ்மான், 28, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் பொதுப்பணித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற, 64 வயது அதிகாரியிடம், வாட்ஸாப்பில் பேசிய மர்ம நபர் ஒருவர், ஆன்லைனில் முதலீடு செய்தால், குறுகிய காலத்தில் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார். நம்பியவர், 75 லட்சத்து 69 ஆயிரம் ரூபாயை அனுப்பி, ஏமாந்தார். திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் விசாரித்தனர்.
அதில், சென்னை, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த வடசென்னை தி.மு.க., இளைஞரணி செயலர் ரஹ்மான், அவரது நண்பர் அபுபக்கர், மீஞ்சூர் பாலா தொடர்பு இருப்பது தெரிந்தது.
ரஹ்மானிடம் நடத்திய விசாரணையில், ஆன்லைன் பரிவர்த்தனையாக பெற்றுக்கொண்ட பணத்தில் கமிஷனாக, 4 லட்சம் ரூபாய், அபுபக்கருக்கு, 1 லட்சம் ரூபாய் எடுத்து கொண்டு, மீதித்தொகையை பாலா என்பவருக்கு அனுப்பியது தெரிந்தது.
இதையடுத்து, போலீசார், ரஹ்மானை கைது செய்து, பாலா, அபுபக்கர் உட்பட, மேலும் பலரை தேடுகின்றனர்.
மேலும்
-
பிற்படுத்தப்பட்டோர் தனிநபர் கடன் திட்டம் (Tag) சிறு தொழில் தொடங்க 25 லட்சம் ரூபாய் வரை கடன்
-
முளைக்குமா வயலில் தண்ணீர் தேங்குவதால் விதை நெல் இளையான்குடியில் மழையால் விவசாயிகள் கவலை
-
தற்காலிக சீரமைப்பு பணி வீண் சேதமடையும் சாலைகளில் அவதி
-
சேதமடைந்த பாசன கால்வாய் சீரமைத்தால் விவசாயிகள் பயன்
-
பருவமழையால் இதுவரை 14 பலி…. மழை பாதிப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டைன் தகவல்
-
ஆஸ்திரேலிய விசா: இந்தியர்களுக்கு பயோமெட்ரிக் பதிவு கட்டாயம்!