லாரி மோதி வாலிபர் பலி
வானுார்: வானுார் அருகே லாரி மோதிய விபத்தில் கல்லுாரி பேராசிரியர் உயிரிழந்தார்.
கிளியனுார் அடுத்த கொஞ்சிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன் மகன் ஜனா (எ) ஜனகன், 41; இவரது மனைவி சரண்யா. இந்த இருவரும் புதுச்சேரி, திலாஸ்பேட்டையில் வசித்து வருகின்றனர். இன்று (அக்.,22) காலை ஜனகன் தனது தாயை பார்க்க, கொஞ்சிமங்கலம் கிராமத்திற்கு சென்றார்.
பின் அங்கிருந்து காலை 9;00 மணிக்கு, திண்டிவனம்–புதுச்சேரி பைபாஸ் சாலை வழியாக, ஸ்கூட்டியில் திரும்பிக் கொண்டிருந்தார். இடையஞ்சாவடி சந்திப்பு சாலை அருகில் வந்த போது, பின்னால் வந்த லாரி அவரது ஸ்கூட்டி மீது மோதியது. அதில் துாக்கி வீசப்பட்டவரை, ஆரோவில் போலீசார் மீட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த விபத்து சம்பவம் குறித்து, அவரது மனைவி சரண்யா கொடுத்த புகாரின் பேரில், ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.