நிலக்கரி கப்பல் மோதி மீன்பிடி வலைகள் சேதம்
துாத்துக்குடி: நிலக்கரி ஏற்றிச் சென்ற கப்பல் மோதியதில் மீன்பிடி வலைகள் சேதமடைந்ததாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
துாத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதியில் நாட்டுப்படகு மீனவர்கள் விரிக்கும் வலைகளை வணிக கப்பல்கள் சேதப்படுத்தும் சம்பவம் அதிகரித்து வருகிறது. மணப்பாடு பகுதியை சேர்ந்த ஜூபில்ட்டன் 45, என்பவர் படகில் 6 மீனவர்களுடன் நேற்று 6 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தார்.
உடன்குடி அனல்மின் நிலையத்திற்காக நிலக்கரி கொண்டுச் சென்ற மரைன் போர்டியூன் என்ற கப்பல் மோதியதில் மீனவர்கள் கடலில் விரித்திருந்த வலைகள் முற்றிலும் சேதமடைந்தன.
குலசேகரன்பட்டினம் மரைன் காவல் நிலையத்தில் ஜூபில்ட்டன் அளித்த புகாரில், 85 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வலைகள் சேதமடைந்ததாக தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தில் பரவலாக பெய்தது மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
உலக சாதனையை முறியடித்தார் இந்தியாவின் சந்தீப்; தங்கம் வென்று தமிழக வீரர் நவீன் அசத்தல்
-
இந்தியாவை குறிவைத்து செய்யவில்லை; விசா கட்டுப்பாடு குறித்து அமெரிக்க அமைச்சர் சப்பைக்கட்டு
-
அக்.,26ல் உருவாகிறது 'அர்னாப்' புயல்... தமிழகத்தில் அதி கனமழைக்கு வாய்ப்பு
-
கனமழையால் வீடு இடிந்து பிளஸ் 2 மாணவி பலி; விருதுநகரில் சோகம்
-
நஷ்டஈடு கேட்டு அவதூறு வழக்கு; டிசம்பர் 11க்குள் வாக்குமூலம் அளிக்க டிரம்புக்கு கோர்ட் கெடு
Advertisement
Advertisement