தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம்
புதுடில்லி: தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை, மருத்துவ சேவைகளுக்கு அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலிப்பது கடுமையான தொழில் முறைகேடு என்றும், அதனைத் தடுக்க மாநில அரசுகள் உரிய கண்காணிப்பு அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
நாட்டின் தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ பரிசோதனை மையங்களில் சிகிச்சைக் கட்டணம் தாறுமாறாக வசூலிக்கப்படுவதை முறைப்படுத்தக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
முறைகேடான செயல்:
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அரசு நிர்ணயித்த வழிகாட்டுதல்களை மீறி, நோயாளிகளிடம் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பது நுகர்வோர் நலனுக்கு எதிரானது மட்டுமல்லாமல், சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாத பெரும் முறைகேடு.
நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எளிதில் பார்க்கும் வகையில், அனைத்து வகையான சிகிச்சைகள், பரிசோதனைகள் மற்றும் படுக்கை கட்டண விவரங்களை ஆங்கிலம் மற்றும் அந்தந்த மாநில மொழிகளில் அறிவிப்பு பலகையாக வைக்க வேண்டும்.
மாநில அரசுகளுக்கு அதிகாரம்:
சுகாதாரத்துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் வருவதால், கட்டண முறைகேடுகளைக் கண்காணிக்கவும், தவறிழைக்கும் மருத்துவமனைகள் மீது உரிமத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் அளிக்கப்படுகிறது. மருத்துவ சேவைகளுக்கான நியாயமான, நிலையான கட்டண உச்சவரம்பை நிர்ணயிப்பது தொடர்பாக, மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் அவசர சிகிச்சைத் தேவையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி, தனியார் மருத்துவமனைகள் கொள்ளை லாபம் ஈட்டுவதைத் தடுக்க, மத்திய அரசு எடுத்துள்ள இந்த நிலைப்பாடு, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்கும் எவ்வோளவு காசு என்பதை கனடா போன்ற நாட்டைப்போல் இந்தியா நிர்ணயம் செய்யவேண்டும் .... மக்கள் அனைவருக்கும் எந்த மருத்துவமனைக்கு போனாலும் சிகிச்சை இலவசமாக்கப்படவேணும் , அதற்கு மக்களிடமிருந்தே சரியான பிரீமியம் தொகையை வசூலிக்கவேண்டும் .... கனடாவில் அவரவர் சம்பாத்யத்திற்கு ஏற்றவாறு ஒரு பிரீமியம் தொகையை வசூலிக்கவேண்டும்மேலும்
-
தமிழகத்தில் பரவலாக பெய்தது மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
உலக சாதனையை முறியடித்தார் இந்தியாவின் சந்தீப்; தங்கம் வென்று தமிழக வீரர் நவீன் அசத்தல்
-
இந்தியாவை குறிவைத்து செய்யவில்லை; விசா கட்டுப்பாடு குறித்து அமெரிக்க அமைச்சர் சப்பைக்கட்டு
-
அக்.,26ல் உருவாகிறது 'அர்னாப்' புயல்... தமிழகத்தில் அதி கனமழைக்கு வாய்ப்பு
-
கனமழையால் வீடு இடிந்து பிளஸ் 2 மாணவி பலி; விருதுநகரில் சோகம்
-
நஷ்டஈடு கேட்டு அவதூறு வழக்கு; டிசம்பர் 11க்குள் வாக்குமூலம் அளிக்க டிரம்புக்கு கோர்ட் கெடு