ஆழியாறு புளியங்கண்டியில் உதவி இயக்குனர் ஆய்வு

ஆனைமலை: ஆனைமலை அருகே, கோட்டூர் பேரூராட்சி, 18வது வார்டுக்கு உட்பட்ட ஆழியாறு புளியங்கண்டியில், பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள வீடுகள் மிகவும் பழுதடைந்துள்ளதை கோவை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மாஹின் அபூபக்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளதால், ஆபத்தான நிலையில் யாரும் வீடுகளுக்குள் வசிக்க வேண்டாம் எனவும், மாற்று ஏற்பாடாக அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடம், அங்கன்வாடி கட்டடங்களில் தங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்த, அதிகாரிகளுக்கு உரிய அறிவுரை வழங்கினார்.

Advertisement