கூடுதலாக 17 ஓட்டுச்சாவடிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தகவல்

விருதுநகர்: விருதுநகரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கலெக்டர் ஷரண்யா அறி தலைமை வகித்து பேசியதாவது: 2027 ஜன. 1ஐ தகுதி நாளாக கொண்டு இளம் வாக்காளர்கள், முதல்முறை வாக்காளர்கள் சேர்த்தல், ஓட்டுச்சாவடிகளை மறுசீரமைத்தல் செய்வதற்கான பணிகள் நடந்து வருகிறது. எந்தவொரு ஓட்டுச்சாவடியிலும் 1200 வாக்காளர்களுக்கு மேற்படாமல் இருக்க வேண்டும் என ஆணையம் வலியுறுத்துகிறது. 7 சட்டசபை தொகுதிகளில் இதுவரை 2001 ஓட்டுச்சாவடிகள் உள்ள நிலையில், தற்போது மறுசீரமைப்பு செய்ய உத்தேசித்துள்ளதன் அடிப்படையில் கூடுதலாக 17 ஓட்டுச்சாவடிகள் உருவாக்கம் செய்யப்பட உள்ளது.திருத்தம் தொடர்பான விண்ணப்பங்களை (சேர்த்தல், நீக்கல், திருத்தம்) நவ. 12 முதல் டிச. 11 வரை பெற்று டிச. 21க்குள் தீர்வு காணப்பட உள்ளது. 2027 ஜன. 4ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது, என்றார்.ஆனந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சோமசுந்தர சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement