சிவன் கோவிலில் சிலுவை: ஹிந்து முன்னணி கண்டனம்

45

புதுக்கோட்டை:
மலம்பட்டி லிங்கமலையை பாதுகாக்க வலியுறுத்தி, ஹிந்து முன்னணி சார்பில், புதுக்கோட்டை எஸ்.பி.,யிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

மனுவில் கூறியிருப்பதாவது:

Tamil News
Tamil News
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே மலம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள லிங்கமலையில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இது மன்னர் அழகிய மணவாள தேவன் கட்டிய கோவில்.சோழர்கால வரலாற்று சான்றுகளாக அரிய கல்வெட்டுகள், சிற்பங்கள், நந்தி சிலை, பழமையான மண்டபம், குன்றுகள் அமைந்திருப்பது அரசு ஆவணங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. பல தலைமுறையாக பொதுமக்கள், பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் உள்ளிட்ட வழிபாடுகளை நடத்தி வந்துள்ளனர்.கோவிலின் தொன்மை, கல்வெட்டுகளை அழிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடக்கிறது.

லிங்கமலை உச்சியில் கிறிஸ்துவர்கள் சிலுவையை வைத்ததாகவும், குளத்துார் தாசில்தார் தலைமையில் நடந்த சமாதான பேச்சில், 'சிலுவை சட்டவிரோதமானது. இது ஹிந்துக்கள், கிறிஸ்துவர்கள் மத்தியில் மத மோதலை உருவாக்கும் செயல்' என, கூறப்பட்டது. மேலும், சிலுவையில் எந்த பராமரிப்பும் செய்யக்கூடாது; சிலுவை அகற்றப்பட வேண்டும் என்றும், வருவாய்த்துறை, காவல்துறை அனுமதியில்லாமல் இருதரப்பினரும் அங்கு எந்த ஒரு செயலும் செய்யக்கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிறிஸ்துவர்கள் நேற்று சிலுவையை பராமரித்து, பாதையை சுத்தம் செய்தபோது, போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு, தடுத்து நிறுத்தப்பட்டது. இது மதமோதல்களை துாண்டும் விதமாக உள்ளது.கடந்த காலங்களில் சிவன்கோவில் லிங்கமலை உள்ளே அத்துமீறி நுழைந்து, அங்குள்ள தொன்மையான கல்வெட்டுகளை உடைப்பது, பாதையை மறைப்பது போன்ற செயல்கள் நடந்தன.லிங்கமலை என்ற பெயரை சவேரியார்மலை என மாற்றும் முயற்சி இன்றளவும் நடக்கிறது. இவை அனைத்தும் மலையை ஆக்கிரமிக்கும் செயலாக தெரிகிறது. அப்பகுதியில் பிரச்னையை துாண்டி மத மோதலை உருவாக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement