தமிழக அரசின் இலவச வேட்டியில் இருமுடி பை சபரிமலையில் ரூ.300க்கு விற்பனை
பண்ருட்டி: சபரிமலை அய்யப்பன் கோவிலில், தமிழக அரசின் இலவச வேட்டியில் தயாரிக்கப்பட்ட இருமுடி பை, 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது குறித்து சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த, அங்குசெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன், 35. கணினி மைய உரியமையாளர். இவர், தன் நண்பர்கள் கிருஷ்ணமூர்த்தி, அசோக்குமார், மணிகண்டன், ரமேஷ் ஆகியோருடன் கடந்த, 21ம் தேதி சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்றார்.
பம்பையில் கேரள அரசின் தேவஸ்வம்போர்டு சார்பில் நடத்தப்படும் கடையில் இருமுடி கட்டுவதற்கான பைகளை நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் வாங்கினர். அந்த பை, தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவசமாக வழங்கும் வேட்டியில் தயாரிக்கப்பட்டிருந்தது.
அந்த வேட்டியில், தமிழக அரசின் முத்திரையுடன் பொங்கல் 2025ம் ஆண்டு, வேட்டி, சேலை வழங்கும் திட்டம், பதிவு எண், ரகம், தொகுப்பு எண், முகமை தமிழ்நாடு பஞ்சாலைக்கழகம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
ஒரு இருமுடி பை, 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த பையில் இரு தேங்காய், சந்தன பாக்கெட் 1, விபூதி பாக்கெட் 1, ஒரு கைப்பிடி பச்சரிசி ஆகியவை இருந்தன. தமிழக அரசின் முத்திரையுடன் கூடிய இந்த வேட்டி எப்படி வந்தது என்பது குறித்து அங்கிருந்த ஊழியர்களிடம் பக்தர்கள் கேட்டதற்கு, அவர்கள் எங்களுக்கு எதுவும் தெரியாது என்றனர்.
தமிழக அரசு ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக வழங்கிய வேட்டிகள் எப்படி கேரளம், அரசின் கடைக்கு விற்பனைக்கு வந்தது. இலவச வேட்டிகள் மொத்தமாக விற்பனை செய்யப்பட்டதா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும் என, சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும்
-
பாரம்பரிய சின்னங்கள் மாணவர்கள் சுற்றுலா
-
சர்வதேச ஆராய்ச்சி தரவரிசை பட்டியல்: புதுச்சேரி பல்கலை பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் அசத்தல்
-
இரு மாணவர்கள் சஸ்பெண்ட் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பதற்றம்
-
இலக்கிய பயிற்சி பாசறை மாணவியர்களுக்கு சான்றிதழ்
-
கூட்டுறவுத்துறை ஊழியர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
-
ஜிப்மர் மேம்பால லிப்ட்இயங்கததால் மக்கள் அவதி