மண்ணில் புதைந்தது அரசு பஸ்; டிரைவர் பலி; கண்டக்டர் உயிர் தப்பினார்!

3

நமது நிருபர்

நீலகிரி மாவட்டத்தில் இரவில் பெய்த கனமழையால், குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் 11 இடங்கள், கோத்தகிரி சாலையில் 4 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, மரங்கள் விழுந்தன. ஊட்டியில் இருந்து கோவைக்கு அரசு பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று இரவு, 10:00 மணிக்கு மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தது.

பர்லியாறு போலீஸ் சோதனை சாவடி அருகே வந்த போது, சாலையில் மரம் விழுந்து கிடந்தது. பஸ் மேட்டுப்பாளையம் நோக்கி செல்ல முடியாது என்பதால் பயணிகள் இறங்கி பர்லியாறு சென்றனர். டிரைவர், கண்டக்டர் மட்டும் பஸ்ஸில் இருந்துள்ளனர்.

மலையில் இருந்து, மரங்கள், பாறைகளுடன் பெரிய மண் சரிவு பஸ் மீது சரிந்து விழுந்தது. இதில் பஸ் முழுவதும் மண் மூடியது. இரவு முழுவதும் பஸ்சின் உள்ளே டிரைவர், கண்டக்டர் இருவரும் சிக்கி உள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்புக்குழுவினர், போலீசார் விரைந்தனர்; மண்ணில் புதைந்த அரசு பஸ்யை மீட்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.

காயங்களுடன் கண்டக்டர் கேசவன் மீட்கப்பட்டார். அவர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டிரைவர் ஜனகராஜ் சடலமாக மீட்கப்பட்டார். மேட்டுப்பாளையம்- குன்னூர் மலை ரயில் பாதையில், 5க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் மலை ரயில் சேவை இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில், அமைச்சர்கள் கமலி, சம்பத் குமார், போலீஸ் அதிகாரிகள் ஐ.ஜி., டி.ஐ.ஜி., எஸ்.பி., ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
Latest Tamil News
Latest Tamil News
Latest Tamil News

@block_Y@

மண்சரிவில் சிக்கினோம்!



காயத்துடன் உயிர் தப்பிய கண்டக்டர் கூறியதாவது: விபத்தில் சிக்கிய அரசு பஸ்சில் பயணிகள் யாரும் பயணிக்கவில்லை, நானும் டிரைவர் மட்டும்தான் இருந்தோம். சாலையில் வரிசையாக மரங்கள் விழுந்தது. பஸ்யை பாதுகாப்பாக நிறுத்த முயன்றபோது மண்சரிவில் சிக்கினோம், என்றார். block_Y
@block_G@

வராதீர்கள்!



தொடர் மழை காரணமாக சுற்றுலா பயணிகள் இன்று(அக்.,24) முதல் அக்.,26ம் தேதி வரை நீலகிரிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் லட்சுமி பவ்யா தெரிவித்துள்ளார்.block_G

களத்தில் தினமலர்!

நிலச்சரிவில் புதைந்த அரசு பஸ் மீட்பு பணிகள் தீவிரம்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement