நீலமலையை உலுக்கி எடுத்த பெருமழை; அன்றே சொன்னது தினமலர்!

3

-நமது சிறப்பு நிருபர்-

கடந்த காலங்களில் 1978, 1990, 1998, 2005, 2021, 2023 ஆண்டுகளில் இதே காலகட்டத்தில் குன்னூரில் மிகப்பெரிய பேரிடர்களும், வரலாற்று பெருமழையும் ஏற்பட்டுள்ளன. குன்னூரில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், இம்மாதம் 21 முதல் நவம்பர் 15 வரையிலான நாட்கள் உச்சகட்ட பேரிடர் அபாய காலமாக எச்சரிக்கப்பட்டு, பெருமளவிலான நிலச்சரிவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளஐ என்பதை தினமலர் நாளிதழ் கடந்த 22ம் தேதி செய்தி வெளியிட்டது.

தடை

Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் கொட்டி தீர்த்த அதி கனமழையால், நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் பர்லியார், கோத்தகிரி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. பர்லியார் நிலச்சரிவில் அரசு பஸ் புதைந்து டிரைவர் உயிரிழந்தார். பல இடங்களில் சாலை துண்டிக்கப்பட்டு உள்ளது. வானிலை சீராகும் வரை கொடைக்கானல், ஊட்டி சுற்றுலா பயணியர் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அவசர கால தொடர்புக்கான எண்கள்

* கட்டணமில்லா எண்: 1077 மற்றும் 0423-2450034, 2450035

* ஊட்டி-042324455772, 04232442433

* குன்னூர்- 04232206002, 04232206102

* கூடலூர்- 04262261296, 04262261252

* கோத்தகிரி- 04266271718

* குந்தா- 04232508123

* பந்தலூர்- 04262220734

சிறப்பு கமிட்டி அவசர அவசியம்...

'நீலகிரி மலை பாதையின் ஸ்திரதன்மையை உறுதிப்படுத்தவும், பருவமழை தீவிரமடைவ தற்கு முன்பு ஆய்வு நடத்தவும் சிறப்பு கமிட்டி அமைக்க வேண்டும்,' என, நீலகிரி ஆவண மைய இயக்குனர் தர்மலிங்கம் வேணுகோ பால் வலியுறுத்தி இருந்தார். மேலும், 2009ல் நடந்த நிலச்சரிவின் போது, மத்திய புவியியல் ஆய்வு மைய குழுவினர், மாநில அரசுக்கு அறி வுறுத்திய தகவல்கள், கடந்த, 10ல் 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இத்த கைய தகவல்களை, மாவட்ட நிர்வாகம் செயல் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

40 இடங்களில் மண்சரிவு: மலை ரயில் ரத்து

குன்னுார் - மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில், 40 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. நீக்ரோ பகுதியில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் குன்னூர் மேட்டுப் பாளையம் இடையே நான்கு நாட்களுக்கு மலை ரயில் இயக்க முடியாது என்பதால் ரத்து செய்யப் பட்டுள்ளது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து பொக்லைன் உள்ளிட்ட வாகனங்களை, ரயில் பாதைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற் பட்டுள்ளது. தொடர் கன மழை பெய்து வரு வதால் இவற்றை அகற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஊட்டி - குன்னுார் மலை ரயில் மட்டும் இயக்கப்பட்டது.

Advertisement