தவ அமுதம் பள்ளியில் விஜயதசமி சேர்க்கை

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு மாணவர் சிறப்பு சேர்க்கை நடந்தது.

விழாவிற்கு பள்ளி தாளாளர் செங்கோல் தலைமை தாங்கினார். செயல் இயக்குனர் சாலை கனகதாரன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் புனிதவள்ளி, விஜயதசமியையொட்டி சேர்க்கைக்கு வந்த மாணவ மாணவிகளுக்கு அரிசியில் ‘அ’ எழுத்தை எழுதி கல்விப்பயணத்தை துவக்கி வைத்தார். இதில் ஏராளமான மாணவ மாணவிகள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துக் கொண்டனர்.

முன்னதாக மாணவர்களின் கல்விபயணத்தில் சிறந்து விளங்க சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

Advertisement