போதை பொருள் வழக்கில் பைனான்சியர் சிக்கினார்
நாகப்பட்டினம்: நாகையில், 'மெத்ஆம்பெட்டமைன்' போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், பைனான்சியர் ராஜ்குமார், 38, கைது செய்யப்பட்டார்.
நாகை அருகே பிரதாபராமபுரத்தில், 137 கிலோ மெத்ஆம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், த.வெ.க., முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூபாலன் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில், சுகநாதன் கூட்டாளி ராஜ்குமார் வீட்டிற்கு சென்ற புலனாய்வு அதிகாரிகள் அக்., 23ல், திருச்சி மத்திய வருவாய் புலனாய்வு அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் அளித்தனர். ராஜ்குமார், வேளாங்கண்ணியில் லாட்ஜ் நடத்துவதோடு, பைனான்சியராகவும் இருந்துள்ளார்.
அக்., 23ல் ஆஜரான ராஜ்குமாரிடம் நடத்திய விசாரணையில், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், அவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதையடுத்து, மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள், ராஜ்குமாரை நேற்று கைது செய்தனர்.
மேலும்
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி
-
மின் இணைப்பு கோரிய விண்ணப்பங்கள் உடனடியாக தீர்வு காண வாரியம் உத்தரவு