மெத் ஆம்பெட்டமைன் வழக்கில் பைனான்சியர் கைது
நாகப்பட்டினம்: நாகையில், மெத் ஆம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவரை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
நாகை அருகே பிரதாபராமபுரத்தில்,137 கிலோ மெத் ஆம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், த.வெ.க., முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூபாலன் உள்ளிட்ட நால்வரை, மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும் கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக பிரதாபராமபுரத்தை சேர்ந்த ஏற்கனவே கைதாகியுள்ள சுகநாதனின் கூட்டாளியான ராஜ்குமார் என்பவர் வீட்டிற்கு சென்ற புவனாய்வு அதிகாரிகள், கடந்த 23 ம் தேதி, திருச்சி மத்திய வருவாய் புலனாய்வு அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் கொடுத்திருந்தனர். ராஜ்குமார் வேளாங்கண்ணியில் லாட்ஜ் நடத்தி வருவதோடு, பைனான்சியராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 23 ம் தேதி ஆஜரான ராஜ்குமாரிடம் நடத்திய விசாரணையில், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ராஜ்குமாருக்கு சொந்தமானது என தெரியவந்தது.
இதையடுத்து ராஜ்குமாரை கைது செய்த மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள், நேற்று நாகை, குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின், திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும்
-
கைகொடுக்கும் மொழி... ஆர்வம் தான் வழி! பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை
-
பல நாடுகளில் இது தேர்தல் காலம்
-
வேலை உறுதி திட்ட பணிகளை நிறுத்த எதிர்பார்ப்பு : விவசாய பணிக்கு உதவ விவசாயிகள் வேண்டுகோள்
-
பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனில் மின்தடையால் பயணிகள் அவதி: தனி 'டிரான்ஸ்பார்மர்'கள் அமைக்க வலியுறுத்தல்
-
'உணவு சந்ததை'யில் சாம்பார், குருமாவுக்கு 'மவுசு' இட்லி, சப்பா த்தியைவிட 'சை டிஷ்' விலை அதிகம்
-
சூதாடிய 8 பேர் கைது