ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் ரத்த தான முகாம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் ரத்ததான முகாம் நடந்தது.
முகாமிற்கு கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். துணை முதல்வர் அசோக் முன்னிலை வகித்தார். புல முதல்வர் லோரா வாழ்த்திப் பேசினார். புல முதல்வர் சக்திவேல் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி ரத்த வங்கி டாக்டர் விஜயகுமார், மேலுார் வட்டார மருத்துவ அலுவலர் பாலதண்டாயுதபாணி சிறப்புரையாற்றினர்.
முகாமில், ரத்ததானம் செய்வதன் அவசியம், 6 மாதங்களுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்யலாம், உடலில் டாட்டூ எனப்படும் பச்சை குத்துவதை தவிர்க்க வேண்டும். புகை மற்றும் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது என அறிவுரை வழங்கி பேசினர்.
இதில், என்.சி.சி., – என்.எஸ்.எஸ்., – ஆர்.ஆர்.சி., – ஒய்.ஆர்.சி., மாணவர்கள், உதவி பேராசிரியைகள் என 50 பேர் ரத்த தானம் செய்தனர். ஒருங்கிணைப்பாளர் சுரேந்திரன் நன்றி கூறினார்.
மேலும்
-
கேரளாவில் நீதிபதியின் 17 வயது மகன் ஓட்டிய காரால் விபரீதம்; விபத்தில் முதியவர் பலி
-
டாக்ஸி டிரைவரிடம் ரூ. 2 லட்சம் மோசடி செய்தவர் பிடிபட்டார்
-
குமரகோட்டம் முருகன் கோவிலில் ரிஷி கோபுரம், மூலவர் விமானம் பாலாலயம்
-
புயல் எச்சரிக்கையால் கடலுக்கு செல்லாத மீனவர்கள் கரையோரங்களில் ஓய்வெடுக்கும் மீன்பிடி படகுகள்
-
புத்தகரம் முத்து கொளக்கியம்மன் தேர் வெள்ளோட்டம் கோலாகலம்
-
ராஜாஜி சந்தை காய்கறி விலை நிலவரம்