குமரகோட்டம் முருகன் கோவிலில் ரிஷி கோபுரம், மூலவர் விமானம் பாலாலயம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில், விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு, நேற்று, ரிஷி கோபுரம், மூலவர் விமானம் பாலாலய விழா சிறப்பாக நடைபெற்றது.
பாலாயலம் என்பது, கோவிலில் திருப்பணிகள் அல்லது புனரமைப்பு, கும்பாபிஷேகம் நடைபெறும் சமயத்தில், மூலவரின் சக்தியை தற்காலிகமாக வேறோரு இடத்திற்கு மாற்றி, அங்கு வழிபாடு நடத்தும் முறையாகும்.
இன்று (அக்.,25) நடைபெற்ற பாலாலய விழாவிற்கு கோவில் செயல் அலுவலர் கேசவன் தலைமை தாங்கினார். காலையில் சிறப்பு யாகசாலை பூஜைகள் துவங்கப்பட்டு, கலச அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனைகள் விமரிசையாக நடைபெற்றன.
பாலாலயம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இறுதிகட்ட திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று, விரைவில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கரூர் அருகே அக்ரஹாரத்தில் தார்ச்சாலை சேதத்தால் அவதி
-
மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள் கட்டளை கிராமத்தில் கலெக்டர் ஆய்வு
-
வெற்றி பயணம் திட்டத்தால் உள்ளூர் வணிகம் பாதிக்கப்படுமே?: அந்துமணி பதில்கள்!
-
போதை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
-
பறவைகள் சரணாலயத்தில் அமைச்சர் ஆய்வு
-
படித்துறையில் துாய்மை பணி களமிறங்கிய தன்னார்வலர்கள்
Advertisement
Advertisement