டாக்ஸி டிரைவரிடம் ரூ. 2 லட்சம் மோசடி செய்தவர் பிடிபட்டார்
புதுடில்லி: வெளிநாட்டு பணத்தை இந்திய பணமாக மாற்றித் தருவதாக, டாக்ஸி டிரைவரிடம், இரண்டு லட்சம் ரூபாய் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
டில்லியை சேர்ந்தவர் அகிலேஷ் குமார். டாக்ஸி டிரைவர். இவருக்கு சமீபத்தில் அறிமுகம் ஆன சாதிக் ஷேக்,45, என்பவர், வெளிநாட்டு பணத்தை இந்திய பணமாக குறைந்த கமிஷனில் மாற்றித் தருவதாக கூறியுள்ளார். கடந்த, 13ம் தேதி அகிலேஷ் குமார் கன்னாட் பிளேஸில் சாதிக்கை சந்தித்தார். தன்னிடம் இருந்த சவுதி அரேபிய நாட்டு நாணயங்களை சாதிக்கிடம் கொடுத்து இந்திய பணமாக மாற்றிக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து, 17ம் தேதி சாதிக்குக்கு போன் செய்த அகிலேஷ், தன்னிடம் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள சவுதி ரியால்கள் இருப்பதாக கூறினார். இதையடுத்து, சாதிக் கூறியபடி மங்களம் பிரஸ் என்கிளேவ் பகுதிக்கு சென்றார். அங்கு, அகிலேஷிடம் இருந்த பணப்பையை வாங்கிக் கொண்ட சாதிக், பதிலுக்கு ஒரு பையை கொடுத்து விட்டு சென்றார்.
அவர் சென்றவுடன் அகிலேஷ் பையை திறந்து பார்த்தார். அதற்குள் பழைய நாளிதழ்கள் இருந்தன. அதிர்ச்சி அடைந்த அகிலேஷ், பிரீத் விஹார் போலீசில் புகார் செய்தார்.
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், ஹர்ஷ் விஹாரில் பதுங்கி இருந்த சாதிக் ஷேக்கை, நேற்று முன் தினம் இரவு கைது செய்தனர். அவ் அர் மீது ஏற்கனவே ஒரு மோசடி வழக்கு நிலுவையில் இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விசாரணை நடக்கிறது.
மேலும்
-
பிற்படுத்தப்பட்டோர் தனிநபர் கடன் திட்டம் (Tag) சிறு தொழில் தொடங்க 25 லட்சம் ரூபாய் வரை கடன்
-
முளைக்குமா வயலில் தண்ணீர் தேங்குவதால் விதை நெல் இளையான்குடியில் மழையால் விவசாயிகள் கவலை
-
தற்காலிக சீரமைப்பு பணி வீண் சேதமடையும் சாலைகளில் அவதி
-
சேதமடைந்த பாசன கால்வாய் சீரமைத்தால் விவசாயிகள் பயன்
-
பருவமழையால் இதுவரை 14 பலி…. மழை பாதிப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டைன் தகவல்
-
ஆஸ்திரேலிய விசா: இந்தியர்களுக்கு பயோமெட்ரிக் பதிவு கட்டாயம்!