டெங்கு முன் தடுப்பு பணி
பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த தீவளூரில் டெங்கு முன் தடுப்பு பணி நடந்தது.
பெண்ணாடம் அடுத்த கணபதிகுறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடந்த பணிக்கு, மாவட்ட மலேரியா அலுவலர் கணபதி தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளங்கோவன், சுகாதார ஆய்வாளர் விக்னேஷ் களப்பணியாளர்கள் கொண்ட குழுவினர் வீடு வீடாக சென்று டெங்கு தடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, நடமாடும் மருத்துவக்குழுவினர் மூலம் டெங்கு கொசுவினால் பரவும் காய்ச்சல் குறித்தும், தடுக்கும் வழிமுறைகள் குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement