புத்தக வாசிப்பு மட்டுமே நம்மை மேல்நோக்கி அழைத்துச் செல்லும் அறிவு சாதனம்-: கூடுதல் இயக்குனர் அருண்மணி பேச்சு
திண்டுக்கல்: ‘புத்தக வாசிப்பு மட்டுமே நம்மை மேல் நோக்கி அழைத்துச் செல்லும் ஒரே அறிவு சாதனம்.’ என, கூடுதல் இயக்குனர் அருண்மணி பேசினார்.
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், பொது நுாலக இயக்ககம், திண்டுக்கல் இலக்கிய களம் சார்பில், 13வது புத்தகத் திருவிழா அங்கு விலாஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்து வருகிறது. நேற்றிரவு 7:00 மணிக்கு நடந்த சிந்தனை அரங்கத்தில் திண்டுக்கல் இலக்கிய களம் துணைத்தலைவர் சரவணன் தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை கூடுதல் இயக்குனர் அருண்மணி பங்கேற்று ‘இல்லந்தோறும் நுாலகம்’ அமைப்போம் என்ற தலைப்பில் பேசியதாவது: கடந்த 12 ஆண்டுகளாய் திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி கல்லூரியில் மாணவர்களிடையே புத்தகத் திருவிழா ஆழமான மாற்றத்தை உருவாக்கியுள்ளது. இறைமை ஏற்றுக் கொண்டவர்கள் பாதயாத்திரை சென்று வேண்டுதலை முடித்து திரும்பும்போது என்ன மனநிறைவு ஏற்படுகிறதோ, அதேபோல இந்த புத்தகத் திருவிழாவிற்கு பயணம் மேற்கொண்டு மக்கள், மாணவர்கள் அறிவுத் திருப்தி, சிந்தனை திருப்தி பெற வேண்டும். கல்விப் புரட்சியில் தமிழகம்தான் இந்தியாவில் முதல் இடத்தில் இருக்கிறது. உயர்கல்வி பயில்வோர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகம். கல்வியினால் மட்டுமே நாம் வளர முடியும் என்பதை நிரூபித்த மாநிலம் தமிழகம். இன்று அத்தனை இலக்குகளிலும் தமிழகம் முதன்மையாக இருப்பதற்கு காரணம் நாம் அமைத்து வைத்திருக்கக்கூடிய அடித்தளமான கல்வி. அறிவியல் கல்வி, தொழில் கல்வி என்று எல்லா வகையிலும் விரிவடைந்து பல்வேறு நிறுவனங்களை உள்ளடக்கிய சிறந்த மாநிலமாக தமிழகம் இருக்கிறது. தமிழகத்தின் 12,525 ஊராட்சிகள், கிராமங்கள், நகரங்கள் என அனைத்து பகுதிகளிலும் நுாலகங்கள் உள்ளன. இந்த முன்மாதிரிகள் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லை. 30 ஆண்டு கால வரலாறை, அந்த அனுபவத்தை 2 நாட்களில் ஒரு நுால் வாசிப்பதன் மூலம் பெற்றுவிடலாம். நாம் எவ்வளவு புத்தகத்தை வாசிக்கிறமோ அதற்கு ஏற்ப நம் வாழ்க்கையில் விரிவான பலன் கிடைக்கும். இன்றைய நிலையில் புத்தக வாசிப்பு மட்டுமே அறிவை மறுசீரமைப்பு செய்து நமது வாழ்வியல் முறைகளை, மனித இயல்புகளையும் மாற்றி நம்மை மேல்நோக்கி அழைத்துச் செல்லும் ஒரே அறிவுச் சாதனம்., என்றார். நிகழ்ச்சியில், முன்னாள் ஊராட்சிகள் இயக்குனர் மலையமான் திருமுடிக்காரி, இலக்கிய களம் தலைவர் மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும்
-
பிற்படுத்தப்பட்டோர் தனிநபர் கடன் திட்டம் (Tag) சிறு தொழில் தொடங்க 25 லட்சம் ரூபாய் வரை கடன்
-
முளைக்குமா வயலில் தண்ணீர் தேங்குவதால் விதை நெல் இளையான்குடியில் மழையால் விவசாயிகள் கவலை
-
தற்காலிக சீரமைப்பு பணி வீண் சேதமடையும் சாலைகளில் அவதி
-
சேதமடைந்த பாசன கால்வாய் சீரமைத்தால் விவசாயிகள் பயன்
-
பருவமழையால் இதுவரை 14 பலி…. மழை பாதிப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டைன் தகவல்
-
ஆஸ்திரேலிய விசா: இந்தியர்களுக்கு பயோமெட்ரிக் பதிவு கட்டாயம்!