பழநியில் ஆர்.எஸ்.எஸ்.,ஊர்வலம்
பழநி: பழநியில் முக்கிய நகர வீதிகளில் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் நடந்தது.
பழநி அருள்ஜோதி வீதியில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை தமிழ்நாடு பிராமண சமாஜ மாநிலத் தலைவர் ஹரிஹரமுத்து அய்யர், ஹிந்து வியாபாரிகள் நலச்சங்க கவுரவ ஆலோசகர் பாஸ்கரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். சிறப்பு அழைப்பாளராக தமிழக நல்லெண்ண குழு ஒருங்கிணைப்பாளர் கேசவ விநாயகம் பங்கேற்றார். அருள்ஜோதி வீதி திருஆவினன்குடி பாளையம் ரோடு வயல் ரவுண்டானா, காந்தி ரோடு, வேல் ரவுண்டானா பெரிய கடை வீதி, நான்கு ரத வீதிகள் ஆகியவற்றில் ஊர்வலம் நடந்து பெரியநாயகி அம்மன் கோயில் எதிரே தேரடியில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் மாவட்டப் பொறுப்பாளர் குப்புசாமி, நகரத் தலைவர் அனந்த சுப்பிரமணியம், விஷ்வ ஹிந்து பரிசத் மாநிலத் தலைவர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஊர்வலம் நிறைவடைந்த தேரடியில் ஆர்.எஸ்.எஸ்., பொதுக் கூட்டம் நடந்தது.
மேலும்
-
அறிக்கை அரசியல் நடத்தும் உதயநிதி: ஸ்டாலினிடம் திமுக சீனியர்கள் குமுறல்
-
திரும்பும் திசை எல்லாம் கான்கிரீட் காடு! கோவையில் குறைந்தது சாகுபடி பரப்பு
-
பர்லியார் நிலச்சரிவில் அரசு பஸ் சிக்கியது எப்படி? நெஞ்சை உருக்கும் தகவல்கள்!
-
தமிழகம் முழுதும் ஆர்.எஸ்.எஸ்., பேரணி: ஏராளமானோர் பங்கேற்பு
-
அலறும் ஐரோப்பா! பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலியில் மீண்டும் போராட்டம்
-
பா.ஜ.,வின் சி பிளானில் ஒரு நடிகர்: சொல்கிறார் காங்., மாணிக்கம் தாகூர்