ரூ.1 கோடி மோசடியில் ஜவுளி கடைக்காரர் கைது

சேலம்,:சேலம், தாசநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி, 75. ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியரான இவர், சேலம் எஸ்.பி., அலுவலகத்தில் அளித்திருந்த புகார் மனு:

தாசநாயக்கன்பட்டியை சேர்ந்த கணேஷ்சங்கர், 65, கோவையில் ஜவுளிக்கடை தொடங்க, 2018ல், என்னிடம், 50 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். தொடர்ந்து கணேஷ் சங்கர் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், என் பேத்திக்கு நிர்வாக ஒதுக்கீடில் மருத்துவ கல்லுாரியில் சீட் வாங்கித்தருவதாக கூறி, 50 லட்சம் ரூபாயை வாங்கினர். பின் மருத்துவ சீட்டும் வாங்கித்தரவில்லை. வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. அவர்

களிடம் கேட்டபோது, தகாத வார்த்தைகளில் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து, சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, கணேஷ் சங்கர், அவரது மகன்கள் உள்பட, 6 பேர் மீது வழக்குப்பதிந்தனர். அதில் கணேஷ் சங்கரை நேற்று கைது செய்தனர்.

Advertisement