வடகிழக்கு மாநிலங்களில் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் முறியடிப்பு
புதுடில்லி: 'ஆப்பரேஷன் டிரைடென்ட்' பெயரில், அசாம் உட்பட மூன்று வடகிழக்கு மாநிலங்களில், ஒரே நேரத்தில், 38 இடங்களில் நடத்தப்பட்ட சோதனை வாயிலாக, சர்வதேச அளவிலான போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை முறியடிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக 18 பேர் கைது செய்யப்பட்டதுடன், 12 லட்சம் ரூபாய் மற்றும் வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தல்காரர்களின் 18 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டன.
நம் நாட்டில் போதைப்பொருள் கடத்தலை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
சமீபத்தில் டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பா.ஜ.,வின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, '2029ம் ஆண்டு இறுதிக்குள் போதைப்பொருள் பிரச்னையில் இருந்து நாடு முழுமையாக விடுவிக்கப்படும்' என்றார்.
அதிரடி சோதனை
இதன் தொடர்ச்சியாக கடந்த 23ம் தேதி, வடகிழக்கு மாநிலங்களான அசாம், மணிப்பூர், மிசோரமில் மத்திய புலனாய்வு அமைப்புகளுடன் சேர்ந்து, மாநில போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், 'ஆப்பரேஷன் டிரைடென்ட்' என்ற பெயரில் அதிரடி சோதனை நடத்தினர்.
ஒரே நேரத்தில், 38 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை வாயிலாக, வடகிழக்கு மாநிலங்கள் பகுதியில் செயல்பட்ட, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது.
சோதனையின் முடிவில், போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 18 பேர் கைது செய்யப்பட்டனர். 500 'டெட்டனேட்டர்' எனப்படும் வெடி பொருட்கள், 12 லட்சம் ரூபாய் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.
கடத்தல்காரர்களின் 17.82 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இந்த நடவடிக்கை வாயிலாக, 100 கோடி ரூபாய் மதிப்பிலான சட்டவிரோத 'ஹவாலா' பரிவர்த்தனைகள் கண்டுபிடிக்கப்பட்டன; கடத்தல்காரர்களின் 1,424 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட கும்பல், இந்தியா, மியான்மர், வங்கதேசம் எல்லைகளுக்கு இடையே, 'டெத் ட்ரையாங்கிள் காரிடர்' எனப்படும் ஆபத்தான சர்வதேச பாதை வழியாக பெருமளவில் போதைப்பொருட்கள் கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை, மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி செய்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு:
பலமான அடி
'ஆப்பரேஷன் டிரைடென்ட்' மூலம் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு மீண்டும் ஒரு பலமான அடியை கொடுத்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் நடத்தப்பட்ட சோதனை வாயிலாக, சர்வதேச வலையமைப்பு முறியடிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க, மத்திய அரசு நிர்ணயித்த உறுதியான இலக்கை இந்த நடவடிக்கை வெளிப்படுத்துகிறது.
சோதனையில் ஈடுபட்ட புலனாய்வு அமைப்பினர், மூன்று மாநில போலீசாருக்கு பாராட்டுகள். போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் அஸ்திவாரம் அழியும் வரை, மத்திய அரசு தன் கடுமையான நடவடிக்கைகளை தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
@quote@பெரும் பின்னடைவு!
அசாம் உட்பட மூன்று மாநிலங்களில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனை, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கில் உள்ள மாநில அரசுகள், மத்திய அரசின் உதவியுடன், போதைப்பொருள் இல்லா இந்தியா என்ற இலக்கை அடைவதில் உறுதியாக உள்ளன. சர்வதேச போதைப்பொருள் கும்பல்களின் சவப்பெட்டியில் கடைசி ஆணி அடிக்கப்படும் வரை, இந்தியா தொடர்ந்து போராடும்
ஹிமந்த பிஸ்வ சர்மா
quote
.
@quote@வங்கிகளில் சோதனை!
சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை விபரம்:
ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட சோதனையில், மணிப்பூர், மிசோரம் மாநிலங்களில் தலா மூன்று பேர் என ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். 'ஹெராயின், பிரவுன் சுகர், மெத் ஆம்பெட்டமைன்' உள்ளிட்ட போதைப்பொருட்கள் எல்லை வழியாக கடத்தி வரப்பட்டு, இடைத்தரகர்கள் வாயிலாக மூன்று மாநிலங்களிலும் வினியோகிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஹவாலா பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டவர்கள், போதைப்பொருள் கடத்தலுக்காக வங்கி கணக்குகளை பயன்படுத்த அனுமதித்தவர்கள், போலி வணிக நிறுவனங்கள், முக்கிய வங்கி கிளைகளில் சோதனை நடத்தப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.quote
மூர்க்கம் எங்கெல்லாம் அதிக மக்கள் தொகையுடன், அரசு ஆதரவுடன் வலுவாக இருக்கிறதோ அங்கெல்லாம் போதைப்பொருட்கள் புழக்கம் அதிகமாக இருக்கும் .....
அவர்களை சுட்டு தள்ள வேண்டியதுதான். நடமாட விட்டால் மறுபடியும் முளைப்பார்கள்.மேலும்
-
பிற்படுத்தப்பட்டோர் தனிநபர் கடன் திட்டம் (Tag) சிறு தொழில் தொடங்க 25 லட்சம் ரூபாய் வரை கடன்
-
முளைக்குமா வயலில் தண்ணீர் தேங்குவதால் விதை நெல் இளையான்குடியில் மழையால் விவசாயிகள் கவலை
-
தற்காலிக சீரமைப்பு பணி வீண் சேதமடையும் சாலைகளில் அவதி
-
சேதமடைந்த பாசன கால்வாய் சீரமைத்தால் விவசாயிகள் பயன்
-
பருவமழையால் இதுவரை 14 பலி…. மழை பாதிப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டைன் தகவல்
-
ஆஸ்திரேலிய விசா: இந்தியர்களுக்கு பயோமெட்ரிக் பதிவு கட்டாயம்!