புயல் வருது… கனமழை கொட்டுது... 9 துறைமுகங்களில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
-நமது நிருபர்-
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது; ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை (அக்டோபர் 26) காலை புயலாக மாறலாம். இது, மேலும் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, வலுப்பெற்று, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஆந்திர கடலோர பகுதிக்கு அருகில், வரும், 28ம் தேதி காலை நகரும்.
மணிக்கு 35 முதல் 60 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ராமேஸ்வரம் உள்ளிட்ட கடல் பகுதியில் சூறாவளி வீசி கடலில் கொந்தளிப்பு ஏற்படும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத் துறையினர் தடை விதித்தனர். படகுகளை கரையில் நிறுத்தப்பட்டு மீனவர்கள் வீடுகளில் முடங்கினர்.
புயல் எச்சரிக்கை கூண்டு
* சென்னை,
* கடலூர்,
* நாகை,
* ராமேஸ்வரம்,
* பாம்பன்,
* புதுச்சேரி,
* காரைக்கால்,
* தூத்துக்குடி
ஆகிய 9 துறைமுகங்களில் எண் 1 புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
வாசகர் கருத்து (1)
கண்ணன் - ,
25 அக்,2026 - 09:11 Report Abuse
மீனவர்கள் உஷாராக இருக்க வேண்டும் புயல் கூண்டு ஏத்தியாச்சு 0
0
Reply
மேலும்
-
உள்நாட்டு பொருட்களை வாங்குங்கள்; தீபாவளி, சத் பூஜைக்கு மக்களுக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி வலியுறுத்தல்
-
அவிழ்த்து வைத்த செருப்பு ஆள்கிறதாம்; வாய்க்கொழுப்பு லியோனிக்கு வலுக்கிறது கண்டனம்
-
நீலமலையை உலுக்கி எடுத்த பெருமழை; அன்றே சொன்னது தினமலர்!
-
புழல் ஏரி உபரி நீர் கால்வாய் 7,000 கன அடி நீரை தாங்கும்…. அதிகமானால் ஆபத்து!
-
வீட்டில் கள்ள நோட்டு அச்சடிப்பு; கேரளாவில் ரூ.2.50 கோடி சிக்கியது!
-
ஓடை ஓட ஓடுகிறேன்; நிமல் ராகவன்
Advertisement
Advertisement