உதயநிதி குற்றச்சாட்டுக்கு நேரம் வரும்போது பதில்

= புல் அவுட் =

டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, எங்கெல்லாம் நெல் சேமிப்பு கிடங்கு தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே கோவிலுாரில், 4.80 கோடி ரூபாய் மதிப்பில், 3,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட, மேற்கூரை அமைப்புடன் கூடிய நெல் சேமிப்பு கிடங்கு திறக்கப்பட்டுள்ளது.

வட கிழக்கு பருவமழையில், நெல் மூட்டைகள் சேதமடையாத வகையில், அனைத்து பகுதிகளிலும் சேமிப்புக் கிடங்குகள் தயார் நிலையில் உள்ளன. டெல்டா மாவட்டங்களில், 100 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ரேஷன் அரிசியை தீட்டி, சன்ன ரக அரிசி என விற்பதாகவும், முறையாக டெண்டர் அறிவிக்கப்படவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கூறும் குற்றச்சாட்டுக்கு, நேரம் வரும்போது, உரிய பதில் அளிக்கப்படும்.

– வெங்கட ரமணன்,

அமைச்சர், த.வெ.க.,

Advertisement