சின்னாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
ஒகேனக்கல்: சின்னாறு நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால், சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பென்னாகரம் டவுன் பகுதிக்கு நீரேற்றம் நிறுத்தப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் டவுன் பகுதிக்கு சின்னாற்றில் இருந்து பைப் லைன் மூலம் குடிநீர் நீரேற்றம் செய்யப்படுகிறது. தற்போது, வடக்கிழக்கு பருவமழை தீவிரமடைந்து அடுத்த சின்னாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் இரவு மாரண்டள்ளியில், 48 மி.மீ., பாலக்கோடு, 49 மி.மீ., பென்னாகரம், 92 மி.மீ., ஒகேனக்கல், 142 மி.மீ., மழை பெய்தது. இதனால், சின்னாற்றில் செந்நிறத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது.பென்னாகரம் டவுன் பஞ்சாயத்திற்கு குடிநீரேற்றம் செய்யும், போடூர் சின்னாற்றில் நீர்வரத்து அதிகரித்ததால், கிணற்றில் நீரேற்றம் செய்யும் பணி தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் ஒகேனக்கல் காவிரியாற்றில் கலந்து, மேட்டூர் அணை சென்றடைகிறது.
மேலும்
-
ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்பு
-
ஜவுளி கடையில் பணம் திருட்டு: பெங்களூரு விரைந்த போலீசார்
-
இந்திய மேலாண்மை மாணவர் மாநாட்டில் சோனா எம்.பி.ஏ., மாணவர்கள் சாதனை
-
விவசாய தொழிலாளர் சங்க மாநில மாநாடு, ஊர்வலம்
-
பத்திர பதிவுத்துறை 'ஸ்டார் 3.0' திட்டத்துக்கு எதிர்ப்பு தமிழ்நாடு பத்திரம் எழுதுவோர் சங்கத்தினர் 'ஸ்டிரைக்'
-
ஏற்காடு மலை பாதையில் இரு வேறு இடங்களில் விழுந்த மரம், பாறை