வாழைத்தோட்டத்தில் தேங்கிய மழைநீர் அகற்றும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள்
குளித்தலை:குளித்தலை
சுற்றுப்பகுதியில், கடந்த, இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. இதில்,
பொய்யாமணி பஞ்., கோரைப்பட்டி பகுதியில், 10 ஏக்கர் வாழை, ஐந்து ஏக்கர்
நெல் பயிரிட்டிருந்த வயலில், மழைநீர் தேங்கியது. வடிகால் துார்ந்து
போனதால் மழைநீர் வெளியேற வழியின்றி வயல்களில் தேங்கியுள்ளது.
இதுகுறித்து
அப்பகுதி விவசாயிகள், பொதுப்பணித்துறை எஸ்.டி.ஓ., வெங்கடேசன்,
குளித்தலை தாசில்தார் மதிவாணன், வி.ஏ.ஓ., கரும்பாச்சலம், பொய்யாமணி
பஞ்., செயலாளர் லெனின்பழனி ஆகியோருக்கு தெரிவித்தனர். சம்பவ
இடத்துக்கு சென்ற அதிகாரிகள், நெல், வாழை தோட்டத்தை பார்வையிட்டனர்.
தொடர்ந்து, தேங்கிய தண்ணீரை வெளியேற்ற, பஞ்., உதவியுடன் பொக்லைன்
இயந்திர உதவியுடன் கிளை வடிகால் கண்ணாரை துார்வாரி, தேங்கிய மழை
தண்ணீரை காட்டுவாரியில் திருப்பிவிட்டனர். இதனால் வெள்ள சேதத்தில்
இருந்து வாழை, நெல் விவசாயம் பாதுகாக்கப்பட்டது.
மேலும்
-
இயல்நிலைப்புக்கு திரும்பியது நீலகிரி; சுற்றுலா மையங்கள் திறப்பு
-
ஒன்றுக்கும் உதவாத அரசு; அவல நிலையில் தமிழகம்; ஸ்டாலின் குற்றச்சாட்டு
-
தவறு செய்தால் சட்டப்படி உரிய நடவடிக்கை; திமுக மாஜி கைதுக்கு அண்ணாமலை வரவேற்பு
-
தாறுமாறாய் அல்ல; தத்துவத்துடன் ஆடுகிற ஆட்டம் தவெக அரசியல் பாதை; அமைச்சர் அருண்ராஜ்
-
மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்கிறது; அதி தீவிரமானது அர்னாப் புயல்
-
இன்றும் தங்கம் விலை அதிகரிப்பு; 2 நாட்களில் சவரனுக்கு ரூ.520 உயர்வு