இன்றும் தங்கம் விலை அதிகரிப்பு; 2 நாட்களில் சவரனுக்கு ரூ.520 உயர்வு

-நமது நிருபர்-

சர்வதேச நிலவரங்களால், தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது.

தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 24) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 560 ரூபாய்க்கும், கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து 13,070 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 220 ரூபாய்க்கும், கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

நேற்றைய நிலவரம்

வார துவக்க நாளான நேற்று (அக்டோபர் 26) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 680 ரூபாய்க்கும், கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து 13,085 ரூபாய்க்கும் விற்பனை ஆனது; வெள்ளி விலை கிராம் 220 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய நிலவரம்

இன்று (அக்டோபர் 27) சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 80 ரூபாய்க்கும், கிராமுக்கு 50 ரூபாய் அதிகரித்து 13,135 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 520 ரூபாய் அதிகரித்தது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை; கிராம் 220 ரூபாய்க்கும், கிலோ 2.20 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

சிறப்பு வீடியோ!

தங்கம் விலை அதிரடி உயர்வு; 3 நாளில் கூடியது எவ்வளவு? வீடியோ பார்த்து தெரிந்து கொள்ள வேண்டுமா?

இங்கே கிளிக் செய்யவும்

Advertisement