ஒன்றுக்கும் உதவாத அரசு; அவல நிலையில் தமிழகம்; ஸ்டாலின் குற்றச்சாட்டு
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: Breaking Bad தொடர்ந்து, தமிழகத்தில் Prison Breakம் துவங்கிவிட்டது; ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகளைத்தான் கண்காணிப்பதில்லை என்று நினைத்தேன். சிறைக்குள் இருக்கும் கைதிகளையும் தப்பிக்க விடும் லட்சணத்தில்தான் இந்த ஆட்சி இருக்கிறது.
புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய அதிர்ச்சியில் இருந்து நாம் மீள்வதற்குள், தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியுள்ளனர். ஒரேயடியாக இத்தனை கைதிகள் தப்பிப்பது 1995க்குப் பிறகு இதுதான் முதல்முறை என்கிறார்கள்.
பாதுகாப்பு ஏற்பாடுகளும், கண்காணிப்பு வசதிகளும் மேம்பட்ட 2026ல் இப்படி நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. வெளியில் இருக்கும் குற்றவாளிகள் சுதந்திரமாகக் குற்றங்களைப் புரிகிறார்கள். உள்ளே இருக்கும் கைதிகளும் தைரியமாகத் தப்பிச் செல்கிறார்கள்.
மொத்தத்தில், ஒன்றுக்கும் உதவாத good for nothing அரசாக இந்த மூடர்கூடத் தவெக அரசு இருக்கிறது. இவர்கள் மக்களைக் காக்கப் போவதில்லை. மக்களே அவர்களைக் காத்துக் கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தமிழகம் சென்றுவிட்டது. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும்
-
தவறு செய்தால் சட்டப்படி உரிய நடவடிக்கை; திமுக மாஜி கைதுக்கு அண்ணாமலை வரவேற்பு
-
தாறுமாறாய் அல்ல; தத்துவத்துடன் ஆடுகிற ஆட்டம் தவெக அரசியல் பாதை; அமைச்சர் அருண்ராஜ்
-
மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்கிறது; அதி தீவிரமானது அர்னாப் புயல்
-
இன்றும் தங்கம் விலை அதிகரிப்பு; 2 நாட்களில் சவரனுக்கு ரூ.520 உயர்வு
-
நாளை மறுநாள் கூடுகிறது தமிழக அமைச்சரவை
-
4-வது ஆண்டாக தேசிய விருதுகளை வென்ற ஈஷா வழிகாட்டுதலில் இயங்கும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்!