மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்கிறது; அதி தீவிரமானது அர்னாப் புயல்
-நமது நிருபர்-
மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு, 'அர்னாப்' என, பெயர் சூட்டப்பட்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 22 கி.மீ வேகத்தில் மேற்கு திசையை நோக்கி நகர்ந்துள்ளது.
இன்று மாலை வரை மேற்கு-வடமேற்கு திசையிலும், அதன்பிறகு வடமேற்கு திசையிலும் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை (அக்டோபர் 28) முற்பகல், இது மிகத் தீவிர சூறாவளி புயலாக ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதிகளில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அப்போது காற்றின் வேகம் மணிக்கு 115 முதல் 125 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 140 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். விசாகப்பட்டினத்தில் உள்ள வானிலை ரேடார் மூலம் புயல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
@block_P@
மழை எச்சரிக்கை
கடலோர ஆந்திரா, ஒடிஷா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு, அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக கனமழை முதல், அதி கனமழை வரை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.block_P
@block_Y@
ரயில் சேவை பாதிப்பு
அர்னாப் புயல் எதிரொலியாக ஆந்திரா, ஒடிசா வழித்தடங்களில் இன்று முதல் அக்டோபர் 30ம் தேதி வரை 60க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன; சென்னை புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட தமிழக ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.block_Y
புயல் வேகமாக வருவது பரவாயில்லை மக்கள் பாதிக்கப்படும் வகையில் கன மழை பெய்து விடக்கூடாதுமேலும்
-
சிப்காட்டில் பழுதான குடிநீர் சுத்திகரிப்பு மையம்
-
கூட்டுறவு பணி நியமனங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை: ஊழியர் சம்மேளனம் அதிருப்தி
-
உதவித்தொகை சான்றிதழ் பெற ரூ.5,000: மாற்றுத்திறனாளிகளிடம் வசூல் வேட்டை
-
ஒவ்வொரு மாணவர்களுக்கும் குறிக்கோள் அவசியம்: முதன்மைக் கல்வி அதிகாரி மகாலட்சுமி அறிவுரை
-
அரசு பள்ளியில் சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு: உயிர் தப்பிய மாணவர்கள்
-
அரசால் வைட்டமின் 'ஏ' டானிக் :மழலையர் பள்ளிகளில் வழங்கல்