தவறு செய்தால் சட்டப்படி உரிய நடவடிக்கை; திமுக மாஜி கைதுக்கு அண்ணாமலை வரவேற்பு
சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க 100 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்ட புகாரில், திமுக முன்னாள் அமைச்சர் மகேஷ், விசாரணைக்குப்பின் நள்ளிரவில் புழல் சிறையில் அடைத்தனர். இந்த கைது நடவடிக்கைக்கு வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: பள்ளிக் கல்வித்துறை தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டின் அடிப்படையில், பள்ளிக் கல்வித் துறை முன்னாள் அமைச்சர் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ள நடவடிக்கையை வரவேற்கிறோம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
கடந்த 2023ம் ஆண்டு, நாங்கள் திமுக பைல்ஸ் வெளியிட்டபோது, தமிழகத்தில் நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் ரூ.1,000 கோடி முதலீடு தொடர்பாக நாம் எழுப்பிய கேள்விகளுக்கு அன்றைய திமுக அரசு உரிய விளக்கம் அளிக்கவில்லை.
அந்த முதலீடும் தமிழகத்துக்கு வரவில்லை, முறைகேடான முதலீடு என்ற எங்கள் குற்றச்சாட்டுக்கும் இன்றுவரை பதில் இல்லை. மகேஷ் தொடர்பான உதயநிதி பெயரிலான அறக்கட்டளை, நோபல் பிரிக்ஸ் நிறுவனம் இயங்கி வந்த அதே முகவரியில் இயங்கி வந்ததாகக் கூறப்பட்ட தகவலுக்கும் இன்று வரை பதில் இல்லை.
நோபல் பிரிக்ஸ் நிறுவனத்திற்கும் உதயநிதி அறக்கட்டளைக்கும் இடையே என்ன தொடர்பு? அந்த நிறுவனத்தின் ரூ.1,000 கோடி முதலீடு தொடர்பான கேள்விகளுக்கு என்ன பதில்? தவெக அரசு வெளிப்படையான விசாரணை நடத்தி, உண்மைகளை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
வீடியோ பாருங்கள்!
திமுகவை சிக்க வைக்க அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை: முக்கிய விஷயங்கள் குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோ பார்க்க ஒரு கிளிக் 'இங்கே'!
ஒருவரை கைது செய்து விட்டால் மட்டுமே அவர் மீதான குற்றம் நிருபிக்கபட்டு விட்டதாக பொருள் இல்லை என்பதை இந்திய குற்றவியல் சட்ட விதிகளை நன்கு அறிந்தவர்கள் ஒப்புக் கொள்வார்கள். ஏனெனில் கைதாகி சில ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பலரது குற்றம் நிருபிக்க படவில்லை என்று நீதிமன்றங்களே முடிவிற்கு வந்து அவர்களை விடுதலை செய்ததும் இந்த நாட்டிலேயே நடந்துள்ளது.
Annamalaiji better you give the DMK files to TVK to take action as BJP didn't mind you
புதுக்கட்சி ஆரம்பிப்பவர்களின். 'தர்மமே '. ஆளும். கட்சியின். அராஜகங்களை தொடாமல். தோற்றவர்களுக்கு. தர்ம. அடி கொடுப்பது. தான் அதையே அண்ணாமலையும். கையில் எடுத்திருக்கிறார்.
இவர் இருந்த கட்சியில் பல ஊழல் பெருச்சாளிகள் இனைந்து இருக்கிறார்கள்
அவர்கள் பற்றி பேச தைரியம் இருக்கா இவருக்கு
கட்டுமரம் ஞாபகம் இருக்கா .. விஞான ஊழலே அவரை வைத்துதான் உள்ளது .. இப்படி இருக்க மற்றவர்களை பேச உங்களுக்கு தகுதி தராதரம் கண்டிப்பா கிடையாது.
தள்ளிப் போய் விளையாடு பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது
அரசியல்வாதி தப்பு பண்ணுணா மட்டுமே சட்டப்படி நடவடிக்கை, பாமர மக்கள் தப்பு பண்ணுணா மாவுகட்டு நடவடிக்கை.என்ன சட்டமோ?
உங்க மச்சான் ஒருத்தர் மேல நெறைய குற்றச்சாட்டு உள்ளதே, அதையும் கொஞ்சம் டிகோட் பண்ணுங்களேன்
பிளாக்மெயில் செய்து
சம்பாதித்தவனுக்கு எந்த பிரவ
ஃபயர் விட்டுக்கிட்டு இருந்தேன். டம்மி பீஸ் என்று இப்போதுதான் புரிந்தது
அன்பில் மகேஷ் கைதை வரவேற்கிறீர்கள் மகிழ்ச்சி. எங்களுக்கும் மகிழ்ச்சி. இதே மாதிரி போதைப் பொருள் கடத்திய த.வெ.க நிர்வாகி மீது மாநில அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
அதையும் இதோடு சேர்த்து கொஞ்சம் புள்ளி விபரம், வரலாறு எல்லாம் சொல்லி கேளுங்கள். அதையும் நீங்கள் கேட்டால்தான் நடுநிலைவாதி. இல்லையென்றால் நீங்கள் த.வெ.கவின் ஊது குழல் என்று அர்த்தம்.
தம்பி அவர் பாராட்டினது மத்திய குற்ற பிரிவு காவலர்களைத்தான்மேலும்
-
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு யுஏஇ நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
-
ஆந்திராவின் கடலோரப் பகுதிகளுக்கு நாளை காலை வரை ரெட் அலெர்ட்; மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை
-
ஜம்மு காஷ்மீர் அமைச்சரவையில் ஹிந்துக்கள் பிரதிநிதித்துவம் குறைப்பு
-
புயல் காரணமாக சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் 12 விமானங்கள் ரத்து
-
நகராமல் ஒரே இடத்தில் அர்னாப் புயல்; கரையை கடக்க 3 மணி நேரமாகும் என கணிப்பு
-
அர்னாப் புயல் எதிரொலி; ஆந்திரா, ஒடிசாவில் சூறைக்காற்றுடன் கொட்டியது கனமழை